உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

2. நாற்கலிமா வையமதில் நாயகன்தன் குடும்பமுடன் ஏற்கமிக வசதியா-ஏறியிருந் தமர்ந்ததற்பின் கோற்கையனா-ச் சேவகனுங் குதிரைகளை வியங்

கொண்டான்

நூற்படுபேர் நளனென்று நோக்கியவர் வியப்புறவே. 3. நாடிறந்து காடுதனை நண்ணியபின் ஓநா-கள் ஓடிவந்து நெருங்கியதும் ஒருகுதிரை யவிழ்த்துவிட்டுச் சாடியதைக் கொன்றவையும் சதைமுழுதுந் தின்னுமுனம் கூடியதோர் நெடுந்தூரங் கொடுவு-த்தான் சேவகனும். 4. தின்றவுடன் ஓநா க திரும்பவும்வந் ததுகண்டு பின்னுமொரு குதிரையினைப் பிணியவிழ்த்து விட்டவுடன் என்றுமிலா வேகத்தில் இயக்கிவிட்டான் சேகவன்தான் அன்றவனின் அகநிலையை ஆண்டவனே அறிந்தவனாம். 5.பேயுற்ற கொடுமையொடும் பெயராத யானைத்தீ

நோயுற்ற பசியினொடும் நொடியில் மீண் டோநா-கள் ஏயுற்ற கடிதில்வந் தெ-தியதைக் கண்டுமனந் தேயுற்ற சேவகனும் திரும்புமொன் றவிழ்த்துவிட்டான். 6. விட்டவுடன் வையத்தின் வேகத்தை யாரறிவார் பட்டறிந்த நிகழ்ச்சிகளின் பயனாகச் சேவகனின் மட்டறியா வேகமுள மனமேபூண் டு-த்திடினும் சட்டமுடன் ஓநா-கள் சார்ந்தனநா லாமுறையும்.

7. செலவரிய கடறுமிகச் சென்றுவிட்ட நிலைமையதும் பலவுயிருக் கோருயிரே படுவதுநன் றெனுநெறியும் தலைவனது நன்றியையும் தகவெண்ணிச் சேவகனே விலகருமோ நா-கட்கு விருந்தானான் விரைகவென்றே.

8. சேவகனை ஓநா-கள் தின்றிடுமுன் ஒருமாவின் தாவரிய கான்கடந்து தலைவனொடும் பிறரு-ந்தார் ஏவினவை செ-துணவிற் கீடுசெ-தும் தலைவருக்கே ஆவியதும் அளித்திடுவோர் அரியவுயிர்க் கொடையரம்மா! உரைநடைக் கதை

ஒரு காலத்தில் ரசிய நாட்டில் ஒரு பெருஞ்செல்வர் இருந்தார். அவர் ஒருமுறை மிகத் தொலைவிலுள்ள தம் நெருங்கிய உறவினரைக் கண்டுவர விரும்பினார். அதனால் ஒருநாள் தம் குடும் பத்தோடும் சேவகனோடும், நான்கு குதிரை பூட்டிய ஒரு வண்டி யிலேறிப்