உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

213

புறப்பட்டார். சேவகன் வண்டியோட்டுவதில் தேர்ந்தவனாத லால், வேகமாக வும் திறமையாகவும் ஓட்டினான்.

வண்டி கொஞ்சத்தூரம் நாட்டு வழியாகச் சென்றபின் மக்கள் வழங் காத காட்டையடைந்தது. காட்டிலுள்ள ஓநா-கள் வண்டியைக் கண் தும், வேகமாக ஓடிவந்தன. சேவகன் கூர்ந்த அறிவுள்ளவனாதலால் சற்றுங் காலந் தாழ்த்தால் ஓநா-கள் நெருங்கிவந்து வண்டியைத் தடுத்து ஆள்கள்மேற் பாயுமென்றறிந்து, சுருக்கா- ஒரு குதிரையை அவிழ்த்து விட்டுவிட்டு, வண்டியை வேகமா- ஓட்டினான். ஓநா-கள் அவிழ்த்துவிட்ட குதிரையைத் துரத்திப் பிடித்துக் கொன்று, அதன் சதையை யெல்லாம் விரைவா-க் கடித்துத் தின்றுகொண் டிருந்தன. அதற்குள் சேவகன் வண்டியை ஒரு காதத்தொலைவு கொண்டு போ-விட்டான்.

மிக

ஓநா-கள் திரும்பவும் தொடருமுன் வண்டியை எட்டாக் கைக்குள் கொண்டுபோ- விடலாமென்று எண்ணிக் கொண்டிருந்த சேவகன் திடுக்கிடும்படி, அவை மீண்டும் ஓடிவந்தன. சேவகன் சிறிதும் தாழ்க் காமல் திரும்பவும் ஒரு குதிரையை அவிழ்த்து விட்டான். அதை அவை துரத்திக் கொண்டிருந்தன. நிலைமை மிக அஞ்சத் தக்கதாயிருப்பதைச் சேவகன் உணர்ந்து, தன் திறமை யெல்லாங் காட்டி முன்னிலும் வேகமா- ஓடும்படி, குதிரைகளைத் தூண்டிவிட்டான். அவை காற்றா-ப் பறந்தன.

ஆயினும் அவ் ஓநா-கள், எவ்வளவு தின்றும் பசியாறாத யானைத் தீயென்னும் நோ- கொண்ட பே-கள் போல, சிறிது நேரத்திற்குள் அக் குதிரையைத் தின்றுவிட்டு மீண்டும் வந்துவிட்டன. சேவகன் பின்னுமொரு குதிரையை அவிழ்த்து விட்டுவிட்டு, ஒரு குதிரையைக் கொண்டே தன்னாலியன்ற அளவு வண்டியை வேகமா ஓட்டினான். வண்டிக்குள் ளிருப்பவர்க்கு மிகவும் அச்ச முண்டாயிற்று. ஆனால், சேகவகன் சற்று மனந்தளர்ந்தும் நம்பிக்கை யை இழக்க வில்லை.

நாடு நெருங்கி வந்தது. ஆனாலும், ஓநா-கள் விடவில்லை. நாலாம் முறையும் அவை வந்துவிட்டன. குதிரை ஒன்றுதான் உளது. அதை அவிழ்த்துவிட முடியாது. ஆதலால், வண்டியை வேகமா விடும்படி துரைக்குச் சொல்லிவிட்டு, சேவகனே திடுமென்று ஓநா- களிடைக் குதித்து அவற்றுக்கு இரையானான். ஓநா-கள் அவனைத் தின்று முடிக்குமுன், வண்டி காட்டைக் கடந்துவிட்டது. ஓநா-கள் திரும்ப வரவேயில்லை. துரையும் அவர் மனைவி மக்களும் சேதமில்லாமல் ஊர்