உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இன்னிசை பாடிக் கொண்டே இன்பமுற் றிருந்த காலை

முன்னுற இசைந்து பின்னர் முடுகியே உலையுஞ் செல்லத்

தன்னையும் அவம தித்துத் தாளமுந் தப்பிற் றென்று

கொன்னுறு சினத்திற் சோற்றுக் குழிசியை உடைத்துப் போட்டான்

(5)

தயிர்க்கெனச் சென்ற நல்ல தமிழிலக் கணியும் ஆ-ச்சி உயிர்க்குறில் நெடிலை நீட்டி ஒலித்ததைத் திருத்திக் கூறிச் செயிர்த்ததன் பின்னுஞ் சற்றும் செவிக்கொளா திருந்த தாலே வயிர்த்ததோர் வெறுப்புக் கொண்டு வாங்குத லின்றி மீண்டான்

(6)

கா-கறி வாங்கற் கென்று கடைக்குப்போ- மருத்து வன்தான் நோ-தரு குறைகள் கூறி நுகருதற் குரிய தேதும்

வா-பட லின்மை கண்டு வாங்குத லொழிந்து வந்தான்

வே-தர அமைச்சன் விட்ட வினைஞரும் மகிழ்ந்து கண்டார்.

(8)

இலையது பறிக்கச் சென்றோர் எழில்மர மேறப் பாதி நிலையினிற் பல்லி சொன்ன நிமித்தமோ தீதா மென்று கலையுறு கணியன் ஆங்கே கைசலித் திருந்து பின்னும் மலைவுதீ ராமை யாலே மரத்தினின் றிறங்கி வந்தான்.

(9)

ஒற்றரால் அமைச்சன் இந்த உறுசுவைச் செ-தி யெல்லாம்

உற்றபின் அரைய னின்பால் உரைத்தனன் அவனும் அந்தக்

கற்றவர் சொல்லால் உண்மை கண்டவர்க் குரிய தந்து நற்றிற உழையன் சொல்லை நம்பியே நாட்டை யாண்டான்.

(10)

சொல்லிய கதைதான் நம்புந் தோரணை யற்ற தேனும் ஒள்ளிய புலமைக் கிந்த உலகிய லறிவும் வேண்டும் பள்ளியின் கல்வி யெல்லாம் பயன்படா புள்ளிக் கென்னும் தெள்ளிய வுண்மை யேனும் தேற்றுதற் குதவு மன்றே.

(11)