உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

1. எழுத்தியல்

எழுத்தின் பிறப்பு (பொது)

1. எழுத்தின் பிறப்பாவது எழுத்தொலி உண்டாகும் முறை, உயிர் களின் முயற்சியினாலே அடிவயிற்றினின்றும் மேனோக்கி எழுப்பப்படும் காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கிடங்களையும் பொருந்தி, நா, உதடு, பல், மேல்வா- ஆகிய வாயுறுப்புகளின் தொழிலினால் வெவ்வே றெழுத்தாக ஒலிக்கும்.

1. நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும்அணுத் திரள்உரம் கண்டம் உச்சி மூக்குற் றிதழ்நாப் பல்அணத் தொழிலின்

வெவ்வே றெழுத்தொலி யா-வால் பிறப்பே.

(1560T. (.74)

வளி - காற்று. துரப்ப - செலுத்த. அணுத் திரள் - ஒலியணுத் திரட்சி, ஒலி.

-

உரம் - மார்பு. கண்டம் - கழுத்து. இதழ் உதடு. அணம் மேல்வா-.

முதலெழுத்துகளின் பிறப்பிடம்

2. முதலெழுத்துகளில் வல்லினத்திற்கு மார்பும், இடையினத்திற் கும்,உயிருக்கும் கழுத்தும், மெல்லினத்திற்கு மூக்கும் இடமாகும்.

இவ் வெழுத்துகட்கு இவ் விடங்கள் இடமாதலை உச்சரித்துக் காண்க.

2. அவ்வழி,

ஆவி இடைமை இடம்மிட றாகும்;

மேவும் மென்மைமூக்கு உரம்பெறும் வன்மை

(1560T. (.75)

மிடறு கழுத்து.