உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்'

இதில் அறிவை அங்குசமாக உருவகித்து, அதனால் அடக்கப்படும் ஐம்புலன்களை யானைகளாக உருவகியாமையால், இஃது ஏக தேச

வுருவகமாகும்.

உவமைக்கும் உருவகத்திற்கும் வேறுபாடு:

உவமை

1. உபமானம் முந்திவரும்.

2. உபமானம் உபமேயம்

வெவ்வேறாகக் கூறப்படும்

உருவகம்

உபமேயம் முந்திவரும்.

உபமானம் உபமேயம்

ஒன்றாகக் கூறப்படும்.

ஆகிய என்பது உருபு.

3. போல என்பது உருபு.

தற்குறிப்பேற்ற வணி

142. இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்ச்சியை வேறொரு காரணம் பற்றி நிகழ்வதாகப் புலவன் தன் குறிப்பை அதன்மேல் ஏற்றிக் கூறுவது தற் குறிப்பேற்றம். இதை 'உத்பிரேட்சாலங்காரம்' என்பர் வடநூலார்.

குறிப்பு - கருத்து.

எண்ட ருங்கடை சென்ற யாமமி யம்பு கின்றன வேழையால் வண்டு தங்கிய தொங்கன் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம் கண்டு நெஞ்சு கலங்கி யஞ்சிறை யான காமர் துணைக்கரங் கொண்டுதம்வயி றெற்றி யெற்றி விளிப்ப போன்றன கோழியே.

இதில், (கைகேசிக்கு வரமளித்த அன்றிரவு) கோழிகள் கடையாமத் தில் இயல்பாகச் சிறகடித்துக் கூவினதை, தசரதன் பட்ட பாட்டைக் கண்டு அவை வருந்தி வயிற்றிற் பலமுறை யடித்துக்கொண்டு கூவுவனபோ லிருந்ததாகக் கூறியிருப்பாதல், இது தற்குறிப்பேற்றம்.