உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

உவமை

பண்புவமை,

மூவகைப்படும். பண்பு - குணம்.

1. பண்புவமை:

பண்புவமை.

97

தொழிலுவமை, பயனுவமை

என

ரு பொருளுக்குப் பண்பினால் ஒப்புமை கூறுவது

உ-ம். முத்துப் போன்ற பல்,

தேன் போன்ற மொழி.

2. தொழிலுவமை: இரு பொருளுக்குத் தொழிலால் ஒப்புமை கூறுவது தொழிலுவமை.

உ-ம்.

புலிபோலப் பா-ந்தான்.

குருவிபோலக் கூப்பிட்டான்.

3. பயனுவமை: இரு பொருளுக்குப் பயனால் ஒப்புமை கூறுவது பயனுவமை. பயன் - விளைவு.

உ-ம்.

கார்நிகர் வண்கை.

இது மேகம் மழையினால் உலகத்தைக் காப்பதுபோலக் கொடை யினால் உலகத்தைக் காக்கும் கை எனப் பயன் குறித்து நிற்பதால் பயனுவமையாயிற்று.

உருவகவணி

6

139. உருவகவணியாவது உபமானத்தையும், உபமேயத்தையும் ஒன் றாக்கி, உபமானத்தை உபமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது. இதை காலங்காரம்' என்பர் வடநூலார்.

140. உருவகத்திற்கு ஆகிய அல்லது என்ற என்பது உருபாக வரும்.

ரூப

உ-ம். இராமன் ஆகிய சிங்கம் அரக்கராகிய யானைகளின்மேற் பா-ந்தது.

சிங்கம் யானையின்மேற் பா-வதுபோல இராமன் அரக்கர்மேற் பா-ந்தான் என்று உபமானமும் உபமேயமும் வேறு வேறு இருத்தற்பாலன இராமனாகிய சிங்கமென்றும், அரக்கராகிய யானைகள் என்றும் ஒன் றாயிருத்தலான், இஃது உருவகமாயிற்று.

141. உருவகத்திலுள்ள பல பொருள்களில் ஒன்று உருவகிக்கப் பட்டும், இன்னொன்று உருவகிக்கப்படாதும் இருந்தால், அஃது ஏகதேச உருவக மெனப்படும். ஏகதேசம் - ஒரு கூறு.