உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இயற்றமிழ் இலக்கணம்

தன்மை அணி

136. ஒரு பொருளின் தன்மையை யாதொரு விகாரமுமின்றி உள்ள வாறு சிறப்பித்துக் கூறுவது தன்மையணி. இதனைச் 'சுவபாவோக்தி அலங்காரம்' என்பர் வடநூலார்.

உ-ம்.

கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்

வெட்டிய மொழியினன் விழிகட் டீயினன்

கொட்டிய துடியினன் குறிக்குங் கொம்பினன்

கிட்டிய தமரெனக் கிளர்ந்த தோளினான்.

இதன் பொருள்: குகன் (பரதனைத் தூரத்திற் கண்டபோது அவன் இராமனோடு போர் செ-ய வருவதாகத் தவறாக எண்ணி) அரையில் உடைவாளைச் செருகி உதட்டைக் கடித்துக் கடுஞ்சொற் கூறித் தீப்பறக்க விழித்துத் துடியைக் கொட்டிப் போர் கிடைத்ததென்று தோள் பூரித்தவ னா-த் -த் தன் வீரரெல்லாம் வருமாறு கொம்பை ஊதினான் என்பது. இதிற் குகனுடைய வீரக்கோலம் உள்ளவாறு கூறப்பட்டிருத்தல் காண்க.

உவமையணி

137. ஏதேனு மொருவகையில் இரு பொருளுக்கு ஒப்புமை கூறுவது உவமையணி. இதை 'உபமாலங்காரம்' என்பர் வடநூலார்.

138. உவமையில் உபமானம், உபமேயம் பொதுத்தன்மை, உவம உருபு என நான்கு உறுப்புகளுண்டு.

உபமானம் உவமம் என்றும், உபமேயம் பொருள் என்றுங் கூறப்படும்.

மதிபோல் அழகிய முகம் என்பதில் மதி உபமானம், முகம் உபமே யம், அழகு பொதுத் தன்மை. போல் உவம உருபு.

மதிமுகம் என உவம உருபு தொக்கு வரும்போது உவமைத் தொகை யெனப்படும்.

உவமையுருபுகள் போல, புரைய முதலியன.

ந.சூ.-போலப் புரைய ஒப்ப உறழ

மானக் கடுப்ப இயைய ஏ-ப்ப

நேர நிகர அன்ன இன்ன

என்பவும் பிறவும் உவமத் துருபே.

(32)