உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

101

6. உயிரளபெடை, செ-யுளில் இசை நிறைப்பதன்றி இன்னிசை பற்றியும் வரும். இசை நிறைப்பது இசைநிறை யளபெடை யென்றும். இன் னிசை பற்றியது இன்னிசை யளபெடை என்றுங் கூறப்படும்.

இன்னிசை யளபெடை உரை (வசனம்), செ-யுள் என்னும் இரண்டிற் கும் பொதுவாம். இன்னிசை - இனிய ஓசை.

'நற்றாள் தொழாஅர் எனின்' இசைநிறை யளபெடை 'கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வா-மற் றாங்கே. எடுப்பதூஉம் எல்லாம் மழை' - இன்னிசை யளபெடை குரீஇ என்பதும் இன்னியசை யளபெடையாகும்.

7. சில சொற்கள் அளபெடுத்துப் பிற சொல்லாவதுண்டு. அது சொல்லிசையளபெடை யெனப்படும்.

உ-ம். 'உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார். வரனசைஇ இன்னும் உளேன்'-

இதில் நசை என்னும் தொழிற் பெயர் அளபெடுத்து இறந்தகால வினையெச்ச மாயினமை காண்க. நசை - விருப்பம். நசைஇ - விரும்பி. சில சொற்கள் எப்போதும் அளபெடுத்தே நிற்கும்.

உ-ம்.

மரூஉ, ஆடூஉ, மகடூஉ, செவியறிவுறூஉ.

உயிரளபெடை பெரும்பான்மை மூன்று மாத்திரையும், சிறுபான்மை நான்கு மாத்திரையும் அளபெடுக்கும்.

உலகிய லளபெடை பன்னிரு மாத்திரை யளபெடுத்தலைப் புலம் பலிற் காண்க. செ-யுளில் நான்கு மாத்திரை யளபெடுத்தலை, ‘செறாஅஅ- வாழிய நெஞ்சு' என்பதிற் காண்க.

4.

இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே.

மொழியீற் றெழுத்துகள்

(1560T. (.91)

8. தமிழில் எல்லா வெழுத்துகளும் மொழியிறுதியில் வருவ தில்லை. அங்ஙனம் வரும் எழுத்துகள் மொழியீற்றெழுத்துக ளெனப்படும்.

பன்னீரு ருயிரும், ஞ ண ந மனயரலவழள என்னும் பதினொரு மெ-யும், குற்றியலுகரமும் ஆகிய இருபத்துநான்கு எழுத்துக்களும் மொழி யீற்றெழுத்துகளாம்.