உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இயற்றமிழ் இலக்கணம்

ஓரெழுத்துச் சொற்கள் தமக்குத் தாமே முதலும் ஈறுமாகும்.

பல வெழுத்துச் சொற்களில் எகரம் தவிர மற்றெல்லா வுயிர்களும் மெ-யோடு கூடி இறுதியாகும்.

குற்றியலுகரம் உகரத்தி லடங்குமேனும் புணர்ச்சி வேறுபாடுபற்றிப் பிரித்துக் கூறப்பட்டது.

ஓரெழுத்துச் சொற்கள்

i.உயிர்

அ-அந்த

ஆபசு இ-இந்த ஈ - வண்டு உ-உந்த

ஊ - மாமிசம்

பல வெழுத்துச் சொற்கள்

ii. மெ-

எ - எந்த ஏ - அம்பு ஐ-அழகு ஒ -ஒப்பாகு

ஓ - மதகுநீர் தாங்கும் பலகை ஔ - பற்றுதல்

கல, களா, கிளி, தீ, புது, சே, கலை, நொ, போ, வௌ. சே - எருது. நொ - வருந்து. வௌ கைப்பற்று.

உரிஞ், கண், பொருந், மரம், மான், கா-, வேர், பால், தெவ், புகழ், வாள்.

iii. குற்றியலுகரம்

வீடு.

குறிப்பு: குற்றுயிர்கள் அளபெடையிலும் ஈறாவரும். கழாஅ, தழீஇ, மரூஉ, சேஎ, அடைஇ, கோஒ, வௌஉ.

உ-ம்.

5.

ஆவி ஞணநம னயரல வழளமெ-

சாயு முகரம் நாலாறும் ஈறே

2. சொல்லியல்

(நன்.சூ.107)

9. மொழிவகை: மொழிகள் தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும்.

10. தனிமொழியாவது ஒரே சொல் தனித்து நிற்பது. இஃது ஒருமொழி என்றுங் கூறப்படும்.

உ-ம்.

மண், மாடு, மகன், வந்தான்.