உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

103

11. தொடர்மொழியாவது பல சொற்கள் தொடர்ந்து நிற்பது. இது சொற்றொடர் என்றும் கூறப்படும்.

உ-ம்.

பனைமரம்.

அறம் செய விரும்பு.

12. பொதுமொழியாவது தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொது வாயிருப்பது. அஃதாவது ஒருகால் ஒருபொருள் தந்து தனிமொழியாயும், மற்றொருகால் பலபொருள் தந்து தொடர்மொழியாயும் இருப்பது.

உ-ம்.

பொதுமொழி

தனிமொழிப்பொருள்

தொடர்மொழிப் பொருள்.

தாமரை

ஒரு மலர்

வேங்கை

ஒரு விலங்கு

தா + மரை = தாவுகின்ற மான். வேம் + கை = வேகின்ற கை.

(1560T..)

6.ஒருமொழி ஒருபொரு ளனவாம்: தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன.

பெயர்ச்சொல்

ஆகுபெயர்

13. ஒரு பொருளின் பெயர் அதற்குச் சம்பந்தமான இன்னொரு பொருளுக்குத் தொன்றுதொட்டு ஆகிவருவது ஆகுபெயர். அது பொரு ளாகுபெயர், இடவாகுபெயர் முதலியனவாகப் பலவகைப்படும்.

1. பொருளாகு பெயர்: பொருளாகு பெயராவது ஒரு பொருளின் அல்லது உடம்பின் பெயர் அதன் உறுப்பிற்கு ஆகிவருவது. இது முதலாகு பெயர் என்றுங் கூறப்படும்.

உ-ம்.

தாமரை முகம் - இதில் தாமரை என்னும் கொடியின் பெயர் அதன் உறுப்பாகிய மலருக்கு ஆகி வந்தது.

2. இடவாகு பெயர்: இடவாகு பெயராவது ஓர் இடத்தின் பெயர் அவ் விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது.

உ-ம்.

கராச்சி வாங்கினாள் - இதில் கராச்சி என்னும் இடப்பெயர் அவ் விடத்தில் நெ-ய3ப்பட்ட பட்டுச்சேலைக்கு ஆகி வந்தது.

3. காலவாகு பெயர்: காலவாகு பெயராவது ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தில் தோன்றும் பொருளுக்கு அல்லது நிகழும் நிகழ்ச்சிக்கு ஆகிவருவது.

உ-ம்.

கோடை விளைந்தது இதில் கோடை என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகிவந்தது.