உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

உ-ம்.

இராமன் வந்தான் - வழாநிலை நேற்று வருவான் - வழு.

இதோ வந்தேன் - வழுவமைதி.

121

ஒருவன் தான் வருமுன்னமே வந்தேன் என்பது வழுவாயினும், விரைவு பற்றி அமைக்கப்படுதலின், வழுவமைதியாயிற்று. இங்ஙனமே பிறவும். திணை வழுவமைதி

42. திணை வழுவமைதியாவது திணைவழுவி ஒரு காரணம்பற்றி அமைக்கப்படுதல்.

43. உயர்திணை எழுவாயைத் தொடர்ந்த பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பொருட்பெயர்களும் அஃறிணை யாயினும், அவ் வுயர்திணையோடு சார்த்திக் கூறப்படும்போது உயர் திணை முடிபைப் பெறும்.

உ-ம். குபேரன் பொன் பெரியன்

அரசன் நாடு பெரியன்

பொருள், உயர்திணை

இடம்

எழுவாயின்

வைத்தியன் வாழ்நாள் பெரியன்

-

காலம்

பயனிலைகளை

நம்பி கை நெடியன்

சினை

அஃறிணை

பெற்றோர் அன்பு பெரியர்

குணம்

எழுவா-களும்

குமணன் கொடை பெரியன்

தொழில்

கொண்டுமுடிந்தன.

குபேரன் பொன் பெரியன் என்பதில், பொன் என்னும் அஃறிணை எழுவா- குபேரன் என்னும் உயர்திணை எழுவாயின் பயனிலையாகிய பெரி யன் என்பதைக் கொண்டு முடிவது வழுவாயினும், தொடர்புபற்றி உயர் திணையோடு சார்த்தி முடிக்கப்படுதலால், வழுவமைதி யாயிற்று, சார்த்தி முடிக்கப் படாவிடின், குபேரனுக்குப் பொன் பெரிது எனத் தன் முடிபு கொள்ளும் இங்ஙனமே பிறவும்.

24. உயர்திணை தொடர்ந்த பொருள்முத லாறும்

அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின.

திணை பால் வழுவமைதி

(நன். சூ.377)

44. திணையும் பாலும் உவப்பினாலும், உயர்த்துக் கூறுதலினாலும், சிறப்பினாலும், செறலினாலும், இழிவாகக் கூறுதலினாலும் வழுவி வரினும் அமைதியே யாகும்.

உ-ம்.

உவப்பு - மகிழ்ச்சி, செறல் - கோபம், இழிவு - தாழ்வு.