உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

உ-ம்.

சாலப்பல

உறுவளி

தவப்பெரிது

நனிபேதை

களிகூர் மனம்

இயற்றமிழ் இலக்கணம்

கழிநெடில்

22. சால உறுதவ நனிகூர் கழிமிகல்.

(நன்.சூ.456)

40. பலகுணம் குறித்த ஓர் உரிச்சொல் கடி என்னும் உரிச்சொல் காப்பு, கூர்மை, விரை (மணம்), விளக்கம் (ஒளி), அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல் (ஒலித்தல்), வரைவு (நீக்கல்), மன்றல் (திருமணம்), கரிப்பு முதலிய பல குணங்களை யுணர்த்தும்.

- LD.

கடிநகர் - காப்பு கடிவேல் - கூர்மை கடிமலர் விரை

-

கடிமார்பு - விளக்கம் கடிப்பே- - அச்சம்

கடியரண் - சிறப்பு

கடிச்செலவு விரைவு.

கடிகாற்று மிகுதி

கடிமணம் - புதுமை

கடிமுரசு - ஆர்த்தல்

-

கடியது வரைவு கடிவினை - மன்றல் கடிமிளகு கரிப்பு

கடி என்னுஞ் சொல் கடு என்றும் திரியும்.

- LD.

கடுஞ்சூல் முதற்சூல்.

கடும்புலி கொடிய புலி.

கடும்பகல் நடுப்பகல்.

கடுக்கா--துவர்ப்புக் கா-.

-

23.

கடியென் கிளவி காப்பே கூர்மை

விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்

வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்.

பொதுவியல்

வழாநிலை, வழு, வழுவமைதி

(நன்.சூ.457)

41. சொற்கள் பொருட் சம்பந்தப்பட்டுத் தொடர்ந்து நிற்கும் பொழுது, முடிக்கப்படுஞ் சொற்களோடு முடிக்குஞ் சொற்கள் திணை, பால், எண், டம், காலம் முதலியவற்றில் ஒத்து இலக்கணப்பிழை யில்லாதிருப்பின் வழாநிலையாம்; இலக்கணப் பிழையா யிருப்பின் வழுநிலையாம்; இலக் கணப் பிழையாயிருந்தும் ஒரு பயன்நோக்கி ஆன்றோரால் அமைக்கப் படின் வழுவமைதியாம்.

வழு - குற்றம், பிழை.

வழாநிலை பிழையில்லா நிலை.

அமைக்கப்படுதல் - அங்கீகரிக்கப்படுதல்.