உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

119

கூரியதோர் வாள்மன் - இதில் ‘இப்போது ஒடிந்துவிட்டது' என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் மன் ஒழியிசைச் பொருளில் வந்தது.

பண்டு காடுமன் - இதில் 'இப்போது நாடாயிற்று' - எனப் பொருள் தருதலின் மன் ஆக்கப் பொருளில் வந்தது.

'சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே' இதில் இப்போது அவன் இல் லாமையால் எமக்குக் கொடுத்தல் ஒழிந்தது என்று பொருள் தருதலின் கழி வுப் பொருளில் வந்தது.

'இயல்பினும் விதியினும் நின்ற வுயிர்முன்

கசதப மிகும்வித வாதன மன்னே'- இதில் மன் என்பது பெரும் பாலும் என்று பொருள்படுதலின், மிகுதிப் பொருளில் வந்தது.

‘மன்னா வுலகத்து மன்னியது புரிமோ' - இதில் மன் என்னும் இடைச் சொல்லடியா-ப் பிறந்த மன்னா, மன்னியது என்னும் சொற்கள் நிலைபெறாத, நிலைபெற்றது எனப் பொருள்படுதலின், மன் நிலைபேற்றுப் பொருளில் வந்தது.

21.

மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம் கழிவு மிகுதி நிலைபே றாகும்.

'தான்' என்னும் இடைச்சொல்

(நன்.சூ.432)

38. தான் என்னும் இடைச்சொல் அசைநிலை, பிரிநிலை, தேற்றம் எனும் மூன்று பொருள்களில் வரும்

உ-ம்.

'தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்' இதில் தான் என்பது வேறு பொருளின்றி அசையா- நிற்றலின் அசைநிலை.

அவன்தான் செ-தான் -இதில் தான் என்பது ஒரு கூட்டத்தாருள் ஒருவனைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை.

வரத்தான் செ-வான் - இதில் நிச்சயமா வருவான் என்று பொருள் படுதலின் தான் என்பது தேற்றப் பொருளில் வந்தது.

உரிச்சொல்

,

39. ஒருகுணம் குறித்த பல உரிச்சொல் -சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறு உரிச்சொற்களும், மிகுதி என்னும் ஒரே குணத்தை உணர்த்தும்.