உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இயற்றமிழ் இலக்கணம்

இடைச்சொல்

'மற்று' என்னும் இடைச்சொல்

35. மற்று என்னும் இடைச்சொல் வினைமாற்று, அசைநிலை, பிறிது என்னும் மூன்று பொருள்களில் வரும்.

உ-ம்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வார்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இதில்மற்று என்னும் இடைச்சொல் கெடுப்பது என்னும் வினையை மாற்றி அதன் எதிர்மறையாகிய கெடுக்காமையைக் குறித்தலால் வினைமாற்று.

'மற்றென்னை யாள்க'

அசையா- நிற்றலா - அசைநிலை.

இதில் மற்று என்பது வேறு பொருளின்றி

மற்றொன்று - இதில் மற்று என்பது பிறிது என்று பொருள் பட்டது.

19. வினைமாற் றசைநிலை பிறிதெனும் மற்றே.

'கொல்' என்னும் இடைச்சொல்

(நன்.சூ.433)

36. கொல் என்னும் இடைச்சொல் ஐயப் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.

உ-ம்.

அவ் வுருக் குற்றிகொல். மகன்கொல் - இதில் குற்றியோ மகனோ என்று ஐயப்பொருள் தருதலால் கொல் ஐயம்.

‘கற்றதனா லாய பயனென்கொல்' இதில் கொல் என்பது வேறு பொருளின்றி அசையா- நிற்றலின் அசைநிலை.

20.

கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே.

'மன்' என்னும் இடைச்சொல்

(நன்.சூ.435)

37. மன் என்னும் இடைச்சொல் அசைநிலை, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி, நிலைபேறு என்னும் ஆறு பொருளைத் தரும்.

நிலை.

'காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள்மன்னோ'

இதில் மன் என்பது வேறு பொருளின்றி அசையா- நிற்றலின் அசை