உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

உ-ம்.

வாரும், வாருங்கள்,

வாரீர்

வருதிர்

117

வம்மின், வம்மின்கள்.

33. பகுதி யளவா- நிற்கும் ஏவலொருமை வினைமுற்றும், வினைப் பகுதியும் வடிவிற் பெரும்பாலும் ஒத்திருப்பினும், பிறவகையிற் பெரிதும் வேறுபடுவனவாகும்.

1. ஏவல்வினை எடுத்தலோசையாற் கட்டளையை யுணர்த்தும்;

வினைப்பகுதி படுத்தலோசையால் தொழிலை யுணர்த்தும்.

2. ஏவல்வினை என்றும் வேறுபடாதிருக்கும்; வினைப்பகுதி சிறு பான்மை வேறுபடும்.

உ-ம்.

ஏவல் வினை

வா

காண்

வினைப்பகுதி

வருகிறான்.

கண்டான்.

3. ஏவல்வினை தனித்து வரும், வினைப்பகுதி விகுதி முதலிய பிற உறுப்புகளோடு சேர்ந்து வரும்.

முற்றெச்சம்

34. வினைமுற்று, எச்சப் பொருள்படின் முற்றெச்ச மெனப்படும். தெரிநிலை வினைமுற்று வினையெச்சப் பொருளிலும், குறிப்பு வினை முற்று பெயரெச்ச வினையெச்சப் பொருள்களிலும் வந்து முற்றெச்ச மாகும்.

உ-ம்.

18.

கண்டனன் தொழுதான் - இதில் கண்டனன் என்னும் தெரி நிலை வினைமுற்று, கண்டு என வினையெச்சப் பொருள்படு தலின் முற்றெச்சம்.

வில்லினன் வந்தான் - இதில் வில்லினன் என்னும் குறிப்பு வினைமுற்று, வில்லையுடையவனா- எனப் வினையெச்சப் பொருள்படுதலின் முற்றெச்சம்.

வில்லினன் இராமன் வந்தான் -இதில் வில்லினன் என்னும் ம் குறிப்பு வினைமுற்று, வில்லையுடைய எனப் பெயரெயெச்சப் பொருள் படுதலின் முற்றெச்சம்.

வினைமுற் றேவினை யெச்சம் ஆகலும்

குறிப்புமுற் றீரெச்சம் ஆகலும் உளவே.

(நன். சூ.351)