உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

பால் இட வழுவமைதி

123

45. ஒருமைப் பாலிற் பன்மைச் சொல்லும் பன்மைப் பாலில் ஒரு மைச் சொல்லும், ஓர் இடத்திற் பிறவிடச் சொல்லும் வந்து தழுவினும் ஒரு காரணம்பற்றி அமைக்கப்படும்.

பால் வழுவமைதி

உ-ம்.

1. ‘நீரெல்லாம் வற்றியது' என்பதில் நீர் என்னும் ஒருமைப் பாலில் எல்லாம் என்னும் பன்மைச்சொல் வந்து மயங்கி, முழுதும் என்று பொருள் தருதலின், வழுவமைதியாயிற்று. இஃது ஒருமை பன்மை மயக்கம் என்று கூறப்படும்.

2. 'இரு கண்ணும் சிவந்தது' என்பதில் இருகண் என்னும் பன்மைப் பாலில், சிவந்தது என்னும் ஒருமைச் சொல் வந்து மயங்கினும், சாதியொருமை பற்றி இருகண்ணும் ஒன்றாக எண்ணப்படுதலின் வழுவமைதியாயிற்று. இது பன்மை யொருமை மயக்கம் என்று கூறப்படும்.

இட வழுவமைதி

-

1. 'இராமன் இதைச் செ-வேனோ' இதில் யான் எனச் சொல்ல வேண்டிய தன்மையிடத்தில் இராமன் என்னும் படர்க்கைச் சொல் வந்தது. இதற்கு 'இராமனாகிய நான்' என்பது பொருள். இது தன்மைப் படர்க்கை எனப்படும்.

2. 'எந்தையை ஈங்குக் கண்டேன்'- இதில் உன்னை எனச் சொல்ல வேண்டிய முன்னிலை யிடத்தில், எந்தை (என் தந்தை) என்னும் படர்க்கைச் சொல் வந்தது. இதற்கு எந்தையாகிய உன்னை என்பது பொருள். இது முன்னிலைப் படர்க்கை யெனப்படும்.

26.

ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே.

கால வழுவமைதி

(நன்.சூ.380)

46. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் இடையறாது ஒரு தன்மையா நிகழும் பொருள்களை நிகழ்காலத்திற் கூறு வர் ஆன்றோல் அது வழுவாயினும், இறந்த காலத்தையும், எதிர்காலத்தை யும் இடைநின்று இணைக்கும் நிகழ்காலத்தைப்போல, நிலையான பொருள் களைக் கூற வேறு காலமின்மையின் அமைக்கப்படும்.

உ-ம்.

கடவுள் இருக்கிறார்.

மலை நிற்கிறது.