உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இயற்றமிழ் இலக்கணம்

இவற்றைக் 'கடவுள் இருந்தார்', 'மலை நின்றது' எனப் பிற காலத் தாற் கூறின், இப்போது கடவுள் இல்லை, மலை நிற்கவில்லை என்று பொருள் படுதல் காண்க.

இனி, முக்காலப் பொருள்களை எதிர்காலத்தாற் கூறுவது முண்டு.

உ-ம்:

நீர் குளிரும்;

தீச்சுடும்.

27.

முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச் செப்புவர் நிகழும் காலத் தானே.

(நன். சூ.383)

47. விரைவும், மிகுதியும், தெளிவும், இயல்பும் பற்றி முக்காலங்களை யும் ஒன்றை மற்றொன்றாக மாற்றிக் கூறுவதுமுண்டு. அவையும் வழு வமைதியாம்.

1.

2.

மிகுதி - பெரும்பான்மை.

உ-ம்.

3.

4.

28.

தெளிவு -நிச்சயம்.

உண்ணற்கிருப்பவனை ஒருவன் விரைவில் அழைத்துப் போக வேண்டி 'இன்னும் உண்ணவில்லையா' என்றால், அவன் 'உண்டேன் உண்டேன்' என்பான். உண்கின்றவனை அங்ஙனம் வினாவினாலும் அவனும் ‘உண் டேன் உண்டேன்' என்பான். இவற்றில் விரைவுபற்றி எதிர்காலமும், நிகழ்காலமும் இறந்த காலமாகச் சொல்லப்பட்டன.

இவ்வழியே சென்றாற் பொருளைப் பறிகொடுத்தா, பறிகொடுக்கின் றா- - இதில் மிகுதிபற்றி எதிர்காலம் இறந்த காலமும், நிகழ்காலமுமாகச் சொல்லப்படுகிறது. பறிகொடுத்தல் சிறுபான்மை தவறினும், தவறுமாத லின், பெரும்பான்மைபற்றி மிகுதி யெனப்பட்டது.

அறம் செ-தால் துறக்கம் புகுந்தான்; புகுகின்றான் - இதில் தெளிவுபற்றி எதிர்காலம் இறந்த காலமும், நிகழ்காலமுமாகச் சொல்லப்பட்டது. அறம் செ-தால் துறக்கம் புகுதல் நிச்சயமாதலின் தெளிவெனப்பட்டது. யாம் முன்னே விளையாடுவது, விளையாடுகிறது இச் சோலை. இதில் இயல்பு (வழக்கம்) பற்றி இறந்தகாலம் எதிர்காலமும், நிகழ்காலமுமாகச் சொல்லப்பட்டது.

விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும் பிறழவும் பெறூஉம்முக் காலமும் ஏற்புழி.

(நன். சூ.384)

மரபு

48. எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எப்படி அறிவுடையோர் சொன்னார்களோ, அப்படியே சொல்வது மரபு எனப்படும். மரபு வழக்கு.