உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

உ-ம்.

29.

125

ஆட்டிடையன், யானைப் பாகன்; குதிரைக் குட்டி, பசுவின் கன்று, தென்னம்பிள்ளை, வேப்பங்கன்று, பனங்குரும்பை, புளியம் பிஞ்சு; மா இலை, பனை ஓலை எனச் சொல்லுதல் மரபு. இங்ஙன மன்றி ஆட்டுப்பாகன், யானையிடையன்; குதிரைக் கன்று, பசுவின் குட்டி: தென்னங்கன்று, வேப்பம்பிள்ளை, பனம் பிஞ்சு, புளியங் குரும்பை, மா ஓலை, பனை இலை எனச் சொல்லுதல் மரபு வழுவாம்.

எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே.

ஒருபொருட் பன்மொழி

(1560T. (.388)

49. ஒரே பொருளிற் பல சொற்கள் அடுக்கி வந்து, அவற்றுள் முதற் சொல் தன் பொருளை உணர்த்த, பிற சொற்களெல்லாம் அப் பொருளை மிகுத் துக் காட்டுமாயின் ஒருபொருட் பன்மொழி யெனப்படும்.

இதற்கு மீமிசைச் சொல் என்றும் பெயர். மீ என்பது மேல். மிசை என் பதும் மேல். மேலும் மேலும் ஒரே பொருளிற் பல சொல் வருவது மீமிசைச் சொல்.

உ-ம்.

நாகிளங் கமுகு மிக இளைய கமுகு. மாபெரு வையம் - மிகப் பெரிய வையம்.

ஓங்கி யுயர்ந்த மரம் - மிக வுயர்ந்த மரம்.

ஒரு தனிச் செல்வன் - சிறிதும் இணையற்ற செல்வன்.

ஒரு பொருட் பன்மொழி சிறப்பி னின்வழா.

30. ஒரு

(நன்.சூ.398)

இரட்டைக் கிளவி

50. இசையும் குறிப்பும் பண்பும்பற்றிச் சில சொற்கள் இரட்டித்தே வரும். அவை இரட்டைக் கிளவி எனப்படும். இசை - ஒலி. கிளவி - சொல்.

உ-ம்.

கலகலவென்று சிரித்தான். மடமடவென்று இரைந்தது.

}

சை

'விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டன்ன விலவிலக்க’ ‘குறுகுறு நடந்து’

மினுமினு வென்றிருக்கிறது காக்கைப் பொன்.

பயிர் கருகரு வென்று வளர்ந்துவிட்டது.

பண்பு

குறிப்பு