உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இயற்றமிழ் இலக்கணம்

இரட்டைக் கிளவி பிரிந்திசைப்பதில்லை. பிரிந்திசைப்பின் இரட் டைக் கிளவிப் பொருள் கெடும்.

அடுக்குத் தொடருக்கும், இரட்டைக் கிளவிக்கும் வேறுபாடு.

1. அடுக்குத் தொடர்ச்சொல் தனித்துவரும்; இரட்டைக் கிளவி தனித்து வராது, இரட்டித்தே வரும்.

2. அடுக்குத் தொடர்ச்சொல் மும்முறை வரை அடுக்கிவரும்; இரட் டைக் கிளவி இருமுறைக்குமேல் வராது.

31. இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா.

புணரியல்

இயல்பு புணர்ச்சி

சில அகரவீற்றின் முன் வல்லினம்

(நன். சூ.396)

51. ‘செ-யிய' என்னும் வா-பாட்டு வினையெச்சத்திற்கும், பலவகை அகர வீற்றுப் பெயரெச்சங்கட்கும், அகரவீற்று வினைமுற்றுகளுக்கும், ஆறாம் வேற்றுமை அகர உருபிற்கும், அகரவீற்றுப் பலவின்பாற் பெயர் கட்கும், ‘அம்ம' என்னும் உரையசை இடைச்சொற்கும் முன்வரும் வல்லினம் இயல்பாம். செ-யிய-செ-ய.

உ-ம்.

உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் - செ-யிய

என்னும் வா-பாட்டு வினையெச்சம்.

உண்ட + பையன் = உண்ட பையன்

உண்கின்ற + குதிரை = உண்கின்ற குதிரை

=

உடன்பாட்டுத் தெரிநிலைப் பெயரெச்சம்.

=

உண்ணாத + பையன் உண்ணாத பையன் எதிர்மறைத் தெரிநிலைப் பெயரெச்சம்

பெரிய + பொருள் = பெரிய பொருள் - உடன்பாட்டுக் குறிப்புப் பெயரெச்சம்

இல்லாத + பொருள் = இல்லாத பொருள் - எதிர்மறைக் குறிப்புப் பெயரெச்சம்

உண்டன +

வினைமுற்று.

குதிரைகள் = உண்டன குதிரைகள் - தெரிநிலை

-

சிறியன + பறவைகள் = சிறியன பறவைகள் - குறிப்பு வினைமுற்று.