உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

127

வாழிய + கொற்றன் வினைமுற்று.

=

வாழிய கொற்றன் வியங்கோள்

தன + கைகள் = தன கைகள் - ஆறனுருபு.

பல + பையன்கள் = பல பையன்கள் - அஃறிணைப் பன்மைப் பெயர்.

சில + தந்தான் = சில தந்தான் - அஃறிணைப் பண்மைப்பெயர்.

அம்ம + கொற்றா = அம்ம கொற்றா - அம்ம என்னும் இடைச்சொல்.

இவற்றுள் 'தன கைகள்', சில தந்தான்', என்னும் இரண்டும் வேற் றுமை வழி; ஏனையவெல்லாம் அல்வழி.

32. செ-யிய என்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரின் எச்சமுற் றாறன் உருபே

அஃறிணைப் பன்மை அம்மமுன் இயல்பே.

சில முற்றியலுகரத்தின் முன் வல்லினம்

(நன். சூ. 167)

52. 'ஒடு' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபிற்கும், 'அது' என்னும் ஆறாம் வேற்றுமை உருபிற்கும், எண்ணுப் பெயர்கட்கும், வினைத்தொகைக் கும் சுட்டுப்பெயர்கட்கும் ஈறாகும் முற்றியலுகரத்தின் முன் வலிவரின் இயல்பாம்.

உ-ம்

இராமனொடு +சென்றான் = இராமனொடு சென்றான் - மூன்றாம் வேற்றுமை உருபு.

இராமனது + பொருள் - இராமனது பொருள் - ஆறாம் வேற்றுமை

உருபு.

ஒரு + படி =ஒருபடி

ஏழு + பாடம் + ஏழுபாடம்

இடு + தேள் = இடுதேள்

தொழு + குலம் = தொழுகுலம்

எண்ணுப்பெயர்.

} வினைத்தொகை.

அது + சொன்னான் = அது சொன்னான்

இது + பெரிது = இது பெரிது

இவற்றுள் உருபு புணர்ச்சிகளும், அது

சுட்டுப்பெயர்.

சொன்னான் என்னும்

சுட்டுப்பெயர்ப் புணர்ச்சியும் வேற்றுமைவழி; ஏனைய அல்வழி.

வினாப்பெயரின் ஈற்று முற்றியலுகரத்தின் முன்னும், இருவழியிலும்

வலிவரின் இயல்பாம்.