உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இயற்றமிழ் இலக்கணம்

உ-ம்.

எது + தந்தான் - எது தந்தான்.

33.

எது + பெரிது = எது பெரிது.

மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ

றாகும் உகரம் முன்னர் இயல்பாம்.

விகாரப் புணர்ச்சி

1. மிகுதல்

(நன். சூ.179)

சில எண்ணுப் பெயர் இரட்டித்தல்

53. ஒன்று முதலிய முதற்பத்து எண்களில், ஒன்ப தொழிந்த மற்றை ஒன்பது எண்களும் இரட்டித்துவரின் (அதாவது தம் முன் தாம் வரின்), நிலைமொழியில் முதலெழுத்தொழிந்த மற்றை எழுத்துகளெல்லாம் கெட, வருமொழி முதலில் உயிரெழுத்து நிற்பின் வகர மெ-யும் மெ-யெழுத்து நிற்பின் அம் மெ-யும் மிகும்.

நிலைமொழி முதலெழுத்து நெடிலாயின் குறுகும்; ஐகாரமாயின் அக ரமா-த் திரியும்.

உ-ம். ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று

இரண்டு + இரண்டு = இவ்விரண்டு

ஐந்து + ஐந்து = அவ்வைந்து

ஆறு + ஆறு = அவ்வாறு

=

ஏழு + ஏழு = எவ்வேறு

எட்டு + எட்டு = எவ்வெட்டு

=

மூன்று + மூன்று = மும்மூன்று நான்கு + நான்கு = நந்நான்கு.

பத்து = பத்து = பப்பத்து

வருமொழிமுதலில் உயிர் வர வகரம் மிக்கது.

} வருமொழி முதலில் வந்த

மெ-கள் மிக்கன.

வ்

வேறு பெயர்கள் இரட்டிக்கும்போது இவ் விகாரத்தை யடையவதும், எண்ணுப்பெயர்கள் வேறு புணர்ச்சி யடைவதுமுண்டு.

உ-ம். வேறு + வேறு = வெவ்வேறு

+

பாதி + பாதி = பப்பாதி

ஒன்று + ஒன்று = ஒரோவொன்று

} -வேறு பெயர்

}

-எண்ணுப் பெயர்கள்.

இரண்டு + இரண்டு = இரண்டிரண்டு

ஒன்று + ஒன்று = ஒன்றொன்று