உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

129

34.

ஒன்ப தொழிந்தஎண் ஒன்பதும் இரட்டின் முன்னதின் முன்னல ஓட உயிர்வரின்

(நன்.சூ.199)

வவ்வும், மெ-வரின் வந்ததும் மிகல்நெறி.

2. கெடுதலும், மிகுதலும்

ஐகாரத்தின் முன் மெ-

54. வேற்றுமைப் புணர்ச்சியில் ஐகார வீற்றுச் சொற்களின் இறுதி ஐகாரம் கெட, ‘அம்' சாரியை தோன்றுவதுமுண்டு.

உ-ம்.

பனை + காடு = பனங்காடு

எலுமிச்சை + பழம் + எலுமிச்சம்பழம்

தாழை + பூ = தாழம்பூ

இறுதிகெட ‘அம்' சாரியை தோன்றிற்று.

இனி, ஐகார வீற்றுச் சொற்கள் இறுதி கெடாது, 'அம்' சாரியை பெற்

றும் பெறாதும் வருவது முண்டு.

உ-ம்

புன்னை + கானல் = புன்னையங் கானல்.

முல்லை + தொடை = முல்லையந் தொடை

முல்லை + புறவு = முல்லைப் புறவு. கொல்லை + புறம் = கொல்லைப்புறம்.

35.

}

இறுதி கெடாது ‘அம்' சாரியை பெற்றன.

இறுதி கெடாதும் ‘அம்’ 'சாரியை பெறாதும் வந்தன.

வேற்றுமை யாயின் ஐகான் இறுமொழி

ஈற்றழி வோடும்அம் ஏற்பவும் உளவே.

i. மகரத்தின் முன் ஞ, ந.

3. திரிதல்

(நன்.சூ.202)

55. நும், தம், எம், நம் என்னும் பெயர்களின் இறுதியிலுள்ள மகர மெ, வருமொழி முதலில் உள்ள ஞகர நகரங்களாகத் திரியும்.

உ-ம்.

நும் + ஞாண், நூல் = நுஞ்ஞாண், நுந்நூல். தம் + ஞாண், நூல் = தஞ்ஞாண், தந்நூல். எம் + ஞாண், நூல் = எஞ்ஞாண், எந்நூல்.

நம் + ஞாண், நூல் = நஞ்ஞாண், நந்நூல்.

நிலைமொழி யீற்று மகரமெ- ஞகர

நகரங்களாகத் திரிந்தது.

நும் என்பதன் திரிபாகிய உம் என்பதும் இதே புணர்ச்சியடையும்.

உ-ம்.

உம் + ஞாண், நூல் = உஞ்ஞாண், உந்நூல்.