உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

36.

நும் தம்

இயற்றமிழ் இலக்கணம்

(நன். சூ.221)

எம்நம் ஈநாம் மவ்வரு ஞநவே.

ii. தனிக்குறி லணைந்த லளமுன் த

56. அல்வழிப் புணர்ச்சியில் தனிக்குறிலை அடுத்த லகர ளகர மெ- கள் வருமொழி முதலில் தகரம் வரின் முறையே றகர டகரங்களாகத் திரி வதுடன் ஆ-தமாகவும் பெறும்.

உ-ம்.

அல் + திணை = அஃறிணை

முள் + தீது = முஃடீது

ல ள, ஆ-தமாகத் திரிந்தன.

கல் + தீது = கற்றீது

முள் + தீது = முட்டீது

ல ள, றகர டகரங்களாகத் திரிந்தன.

37.

(நன். சூ.)

குறில்வழி லளத்தவ் வணையின் ஆ-தம்

ஆகவும் பெறூஉம் அல்வழி யானே.

4. மிகுதலும் திரிதலும்

குற்றியலுகரப் புணர்ச்சி. குற்றியலுகரத்தின் முன் நாற்கணம்.

i. ஒற்று இரட்டித்தல்

57. நெடிற்றொடர்க் குற்றியலுகரமும், உயிர்த்தொடர்க் குற்றியலுகர மும் ஏறிய டகர றகர மெ-கள் வேற்றுமை வழியிற் பெரும்பாலும் இரட்டும்.

உ-ம்.

காடு + விலங்கு = காட்டு விலங்கு ஆறு = நீர் = ஆற்று நீர்

நெடிற்றொடரில், ட, ற இரட்டித்தன.

முரடு + மனிதன் = முரட்டுமனிதன்

வயிறு = + எரிச்சல் = வயிற்றெரிச்சல்

உயிர்த்தொடரில்

ட, ற இரட்டித்தன.

இனி, 'நாடு கிழவோன்' 'கிணறு வெட்டினான்' என டகர றகர மெ- கள் வேற்றுமை வழியில் இரட்டாமலும், 'காட்டரண்' 'களிற்றியானை' என அல்வழியில் இரட்டித்தும் வருதலும். 'வெருக்குக்கண்' 'எருத்துமாடு' எனப் பிறமெ-கள் இருவழியிலும் இரட்டித்து வருதலும் கொள்க.

38. நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே.

(நன்.சூ.183)