உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

ii. மென்றொடர் வன்றொடராதல்

131

58. மென்றொடர்க் குற்றியலுகர மொழிகளுட் சில வேற்றுமைப் புணர்ச்சியில் தமக்கினமான வன்றொடர் மொழிகளாகத் திரியும்; பல அங் ஙனம் திரியா.

உ-ம்.

இரும்பு + பாதை = இருப்புப்பாதை வேம்பு + இலை = வேப்பிலை

குரங்கு + குட்டி = குரக்குக்குட்டி

=

வேற்றுமை வழியில்

வன்றொடராயின.

மருந்து + பை = மருத்துப்பை

வண்டு + கால் = வண்டுக்கால்

பந்து + வடிவு = பந்துவடிவு

வேற்றுமை வழியில்

நண்டு + கண் = நண்டுக்கண்

சங்கு + இனம் = சங்கினம்

வன்றொடரா காதன.

இனி, 'நச்சுப் பகை' 'இருப்பு மனம்' என அல்வழியில் மென் றொடர் வன்றொடராதலும், 'பாம்புத் தோல்' பாப்புத் தோல்' எனவும் ‘அன்புத் தளை' 'அற்புத் தளை' எனவும் வேற்றுமை வழியிலும், அல்வழியிலும் விகற்பித்து வருதலுங் கொள்க.

39.

மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில் தம்மின வன்றொடர் ஆகாரமன்னே.

இயல்பு புணர்ச்சியும், விகாரப் புணர்ச்சியும்

1. இயல்பும் மிகலும் திரிதலும்

எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும்.

(நன். சூ.184)

59. இருபத்து நான்கு எழுத்துகளையும் இறுதியாகவுடைய எல்லா வகைச் சொற்களுக்கும் முன்னே வருமொழி முதலில் வரும் ஞ, ந, ம என் னும் மெல்லின மெ-களும் ய, வ, என்னும் இடையினமெ-களும் இயல்பாம்.

அல்வழி

உ-ம்.

இள + ஞாயிறு = இளஞாயிறு.

=

பனை + நெடிது = பனைநெடிது.

பொன் + மாண்டது = பொன் மாண்டது.

பேர் + யாது = பேர் யாது.

எஃகு + வலிது = எஃது வலிது.

ஞநமயவ இயல்பாயின.