உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்றமிழ் இலக்கணம்

4 ஆம் பாரம் (9 ஆம் வகுப்பு) 1. எழுத்தியல்

1. எழுத்து

1. மக்கள் தம் கருத்தைப் பிறர்க்கு அறிவித்தற்குக் கருவியாகும் ஒலிக் கூட்டம் மொழி அல்லது பாஷை எனப்படும்.

ஒரு மொழி பல வாக்கியங்களாகவும், ஒரு வாக்கியம் பல சொற்களாக வும், ஒரு சொல் பல எழுத்துகளாகவும் பகுக்கப்படும். ஆகவே எழுத்தே ஒரு மொழிக்கு முதலுறுப்பாகும்.

2. எழுத்தாவது ஒரு சொல்லுக்குக் கருவியாகும் ஒலி. கருவியெனினும் காரணமெனினும் ஒன்றே. கருவி, முதற்கருவி துணைக்கருவி என இரு வகைப்படும். குடத்திற்கு மண் முதற்கருவி; தண்ட சக்கரம் துணைக் கருவி. முதற்கருவி பின்பு காரியமா- மாறுவது; துணைக்கருவி முதற்கருவி காரியப்பட உதவுவது. காரியமாவது கருவிகளாற் செ-யப்படும் பொருள். இங்குக் கூறிய உதாரணத்திற் காரியம் குடம். அது மண்ணாலாயது. அதுபோல எழுத்து ஒலியாலாயது. எழுத்து ஒலியென்பதை, எந்த எழுத்தையும் ஒலித் துக் எண்க.

ஒலி வடிவாயுள்ள எழுத்து வரிவடிவா- எழுதப்படுதலின் எழுத் தெனப் பட்டது. வரி - கோடு. ஒலி செவிப்புலனாயது; வரி கட்புலனாயது. ஆகவே எழுத்திற்கு இருவகை வடிவுகளுண்டாம். அவற்றுள் ஒலியே எழுத்து. அதை அறிவிக்கும் குறியே வரி. ஆயினும் இவ் விரண்டிற்குமுள்ள இயைபு பற்றி இரண்டும் எழுத்தெனப்படும். இதை எழுது, எழுத்துக் கூட்டு என் னும் வினைகளாலுணர்க.

3. தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.