உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இயற்றமிழ் இலக்கணம்

4. முதலெழுத்து: முதலாவதுண்டான எழுத்துக்கள் முதலெழுத்துகள், உயிரெழுத்துப் பன்னிரண்டும், மெ-யெழுத்துப் பதினெட்டும் முதலெழுத்து களாம்.

முதல் முதன்மை அல்லது காரணம்; வாணிக முதல் போல. உயிரும் மெ-யும் முதலில் உண்டானமையும், பிற எழுத்திற்குக் காரணமானவையும் அறிக.

1. உயிரும் உடம்பும் ஆம் முப்பதும் முதலே.

(நன்னூல்,59)

5. சார்பெழுத்து: முதலெழுத்துச் சார்ந்து வரும் எழுத்துகள் சார் பெழுத்துகள். அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆ-தம் என *மூன்றாம். இவற்றுள், முன்னிரண்டிற்கும் வரிவடிவில்லை. ஆ-தத்திற்கே வரிவடி

வுண்டு.

2. உயிரெழுத்து

6. உயிரெழுத்துகள்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ எனப் பன்னிரண்டு.

வை உயிர் போன்றமையின் உயிரெனப்பட்டன. உயிரானது தானே அசையும்; ஓர் உடம்பையும் அசைவிக்கும். அதுபோல உயிரெழுத்துத் தானே ஒலிக்கும்; ஒரு மெ-யெழுத்தையும் ஒலிப்பிக்கும்.

7. உயிரெழுத்துகள் குற்றெழுத்து, நெட்டெழுத்து என இருவகைப்படும்.

8. குற்றெழுத்து: அ, இ, உ, எ, ஓ, என ஐந்து.

இவை குறுகி யொலித்தலின் குற்றெழுத் தெனப்படும். இவை குறி லென்றும் கூறப்படும்.

9. நெட்டெழுத்து: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என ஏழு.

வை நீண்டொலித்தலின் நெட்டெழுத் தெனப்பட்டன.

இவை நெடிலென்றும் கூறப்படும்.

குறில், நெடிலை நோக்கக் குறுகியும், நெடில் குறிலை நோக்க நீண்டு மிருத்தல் காண்க.

  • நன்னூலார் பத்து எனப் பெருக்கிக் கூறுவர்.