உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

ஆ+ஐ=ஆவை, ஆனை

மா + ஐ = மாவை, மானை

கோ + ஐ = கோவை, கோனை

}இயல்பும் னகரச் சாரியைப் பேறும்.

இனி, புணர்ச்சியிலன்றித் தனிமொழியா யிருக்கும்போதும், ஆ, மா, கோ என்னும் பெயர்கள் ஆன், கோன், மான் என னகரச் சாரியை பெற்று நிற்கும்.

34. ஆமா கோனவ் வணையவும் பெறுமே.

(நன். சூ.248)

சூத்திரத்தில் ஆமா என்பது இரட்டுறலா யிருத்தலால் ஆமா என்னும் காட்டுப்பசுப் பேரும் கொள்ளப்படும்.

உ-ம்.

-

புணர்மொழி ஆமா + ஐ = ஆமாவை, ஆமானை.

தனிமொழி -ஆமான்.

ii. கெடுதலும் திரிதலும்

குற்றிய லுகரத்தின் முன்னும் சில முற்றிய லுகரத்தின் முன்னும் உயி ரும் யகரமும் புணர்தல்.

140. குற்றியலுகரம் வருமொழி முதலில் உயிர்வரின் கெடும்; யகரம் வரின் இகரமாகத் திரியும். முற்றியலுகரம் சிறுபான்மை இவ்விரு விகாரங் களையும் அடையும்,

உ-ம்.

வரகு + அரிசி = வரகரிசி

காடு + அடர்ந்தது = காடடர்ந்தது

=

வரகு + யாது வரகியாது

காடு + யாங்கு

'குற்றியலுகரம் கெட்டது.

}குற்றியலுகரம் இகரமாகத்

= காடியாங்கு }குற்றிய

கதவு + அடை = கதவடை

அது + ஐ = அதை

கதவு + யாங்கு = கதவியாங்கு?

திரிந்தது.

} முற்றியலுகரம் கெட்டது.

} முற்றியலுகரம் இகராமத்

செலவு + யாது = செலவியாது } முற்

35. உயிர்வரின் உக்குறள் மெ-விட் டோடும்

யவ்வரின் இ-யாம் முற்றும்அற் றொரோவழி.

திரிந்தது.

(நன்.சூ.164)