உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

iii. கெடுதலும் மிகுதலும் திரிதலும்

மகரவீறு

47

141. மகரவீற்றுச் சொற்கள் பிற சொற்களோடு புணரும்போது, மகர வீறு கெட்டு உயிரீறுபோலப் புணரும். வருமொழி முதலில் வலிவரின் மகர வீறு கெடாது அதற்கின மெல்லினமாகத் திரிவது முண்டு.

உ-ம்.

36.

மரம் + அடி = மரவடி - மகரவீறுகெட்டு உயிரீறுபோல உடம் படுமெ - பெற்றது.

மரம் + பலகை = மரப்பலகை - மகரவீறு கெட்டு உயிரீறு

போல வலிமிக்கது.

மரம் + சா-ந்தது = மரஞ்சா-ந்தது.

இடம் + தந்தான் = இடந்தந்தான்.

கூடம் + கோணல் = கூடங்கோணல்

மகரவீறு கெடாது இன மெல்லினமாகத் திரிந்தது.

மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும் வன்மைக் கினமாத் திரிபவும் ஆகும்.

(நன். சூ. 129)