உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

1. எழுத்தியல்

1. சுட்டெழுத்து

1. அ, இ, உ என்னும் மூன்றெழுத்துகளும் ஒரு சொல்லின் முதலில் வந்து சுட்டுப்பொருளைத் தரின் சுட்டெழுத் தெனப்படும்.

சுட்டுப் பொருள் - ஒன்றைக் குறித்துக் காட்டும் அர்த்தம்.

2. சுட்டு அகச்சுட்டு, புறச்சுட்டு என இருவகைப்படும்.

3. அகச்சுட்டாவது ஒரு சொல்லுக்குள்ளேயே நின்று சுட்டுப்பொரு ளைத் தருவது. (அகம் - உள்)

உ-ம். அவன், அது, அந்த

இவன், இது, இந்த

உவன், உது, உந்த

சொல்லுக்குள்ளே நிற்றலாவது சொல்லுக்கு உறுப்பா- நிற்றல். அவன் என்னும் சொல்லில் அ என்னும் சுட்டெழுத்து ஓர் உறுப்பாயுள்ளது. அவ் வெழுத்தைப் பிரித்துவிட்டால் அவன் என்னும் சொல் இல்லாமற் போம். ஆகையால் அவன் என்பதில் அ என்பது அகச்சுட்டாயிற்று.

4. புறச்சுட்டாவது ஒரு சொல்லுக்குப் புறமாக நின்று சுட்டுப்பொரு ளைத் தருவது. (புறம் - வெளி)

உ-ம்.

அம் மனிதன்

இம் மனிதன்

உம் மனிதன்

அம் மனிதன் என்பதில் அ, மனிதன் என்று இரு சொற்கள் உள. அ என்னும் சுட்டெழுத்து மனிதன் என்னும் சொல்லுக்குப் புறமாகவுளது; ஆகையால் புறச்சுட் டெனப்பட்டது. இங்ஙனமே பிறவும். அ என்பது ஓர் எழுத்தாயினும் பொருள் தருதலின் சொல்லெனப்பட்டது.