உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

அகச்சுட்டு தனிமொழியிலும், புறச்சுட்டு தொடர்மொழியிலும் வரும்.

49

குறிப்பு: அகரம் தொலைவிலுள்ள பொருளையும், இகரம் பக்கத் திலுள்ள பொருளையும், உகரம் இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள பொரு ளையும், பின்னாலுள்ள பொருளையும் மேலேயுள்ள பொருளையும் சுட்டிக் காட்டும்.

உ-ம்.

-

- இடை - உவன்

பின் - உப்பக்கல் (பின்பக்கம்), உத்தரகாண்டம் (பின்காண்டம்)

மேல் - உயரம், உச்சி, உன்னதம், உம்பர் (அகச்சுட்டு)

அகரம் சே-மைச்சுட்டு என்றும், இகரம் அண்மைச்சுட்டு என்றும், உகரம் இடைமைச் சுட்டு என்றும் கூறப்படும்.

உகரச்சுட்டு செ-யுள் வழக்கு.

1. அ, இ, உமுதல் தனிவரிற் சுட்டே.

௨. வினாவெழுத்து

(நன். சூ.66)

5. ஆ, எ, ஏ, ஓ என்னும் உயிரெழுத்துகளும், யா என்னும் உயிர் மெ-யெழுத்தும் வினாப்பொருளில் வரும்போது வினாவெழுத்துகளாம்.

6. ஏ, யா என்பவை சொல்லுக்கு முதலிலும், ஆ, ஓ என்பவை சொல் லுக் கீற்றிலும், ஏ என்பது அவ் வீரிடத்திலும் வினாவாக வரும்.

7. வினா அகவினா, புறவினா என இருவகைப்படும்.

8. அகவினா: ஒரு சொல்லுக்கு அகமாக நின்று வினாப்பொருளைத் தருவது அகவினா. (அகம் - உள்)

உ-ம்.

எவன்?

ஏது?

யார்?

மொழிமுதல் அகவினா.

எவன் என்னும் சொல்லில் எ என்னும் வினாவெழுத்து ஓர் உறுப் பாகவுள்ளது. அவ் வெழுத்தைப் பிரித்துவிட்டால் எவன் என்னுஞ் சொல் இல்லை. ஆகையால் அது அகவினா எனப்பட்டது. இங்ஙனமே பிறவும்.

9. புறவினா: ஒரு சொல்லுக்குப் புறமாக நின்று வினாப்பொருளைத் தருவது புறவினா. (புறம் - வெளி)