உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

உ-ம்.

எப்பையன்?

யாங்ஙனம்?

இராமனா? வந்தானா?

இராமனோ? வந்தானோ?

இயற்றமிழ் இலக்கணம்

மொழிமுதல் புறவினா

மொழியீற்றுப் புறவினா

எப்பையன் என்பதில் எ, பையன் என்று இரு சொற்களுள. எ என்னும் வினாவெழுத்துப் பையன் என்னும் சொல்லுக்குப் புறமாகவுள்ளது. ஆதலின் புறவினா எனப்பட்டது. இங்ஙனமே யா என்பதும்.

இராமனா என்பதில் இராமன் என்னும் சொல்லும் ஆ என்னும் வினா வெழுத்துமாக இரு சொற்கள் உள. ஆ என்பது இராமன் என்னும் சொல்லுக் குப் புறமாக உள்ளது. ஆதலால் புறவினா எனப்பட்டது. இங்ஙனமே பிறவும்.

அகவினா தனிமொழியிலும், புறவினா தொடர்மொழியிலும் வரும். புறவினாவில் மொழிமுதல் வருவது சொல்லாகவும் மொழியீற்றில் வருவது அசையாகவும் இருக்கும்.

மொழிமுதல் வினா அகம், புறம் என்னும் இருவகையாகவு மிருக்கும். மொழியீற்று வினா புறமாகவே யிருக்கும்.

ஏகார வினா செ-யுள் வழக்கு.

2.

எயா, முதலும் ஆ, ஓ ஈற்றும்

ஏஇரு வழியும் வினாவா கும்மே.

(1560T. (.67)

ங. இனவெழுத்து

10. எழுத்துக்கள் ஒலி, அளவு, தன்மை, பிறப்பு முதலிய பல காரணங்களால் ஒன்றுக்கொன்று இனமாகும். அங்ஙனம் இனமான எழுத்துகள் இனவெழுத்துகள்.

(இனம் -முறை, சம்பந்தம்)

ஒலிபற்றிய உயிரெழுத்துகளில் ஐ ஒள நீங்கலாக மற்றைப் பத்தும், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ எனக் குறிலும் நெடிலுமாக ஒன்றுக்கொன்று இனமாகும். அளவுபற்றிக் குறில்களெல்லாம் ஓரினம்; நெடில்களெல்லாம் ஓரினம்.

தன்மைபற்றி வல்லின மெல்லாம் ஓரினம்; மெல்லின மெல்லாம் ஓரினம்; இடையின மெல்லாம் ஓரினம்; வல்லினமும் மெல்லினமும் ஒன் றுக்கொன்று எதிரான இனம். உயிரெல்லாம் ஓரினம், மெ-யெல்லாம் ஓரினம்.