உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

51

பிறப்புப்பற்றி இ, ஈ, எ, ஏ, ஐ என்னும் ஐந்தும் ஓரினம்; உ, ஊ, ஒ, ஓ ஒள என்னும் ஐந்தும் ஓரினம்.

உயிரெழுத்துகளில் குறிலும் நெடிலுமாக அடுத்துடுத் தெழுதப்படும் எழுத்துகள், ஒலியால் ஒன்றுக்கொன் றினமாதல்பற்றியே.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ; எ, ஆ

ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என ஒத்த வடிவில் எழுதப்படுகின்றன. ஒலி முந்தியது: வரி பிந்தியது.

உயிரெழுத்துகளில் ஐ ஒள என்னுமிரு நெடில்கட்கும் இயற்கை இனக் குறிலில்லை. ஐ என்பது அ, இ என்னும் ஈரொலிகள் சேர்ந்த புணரொலி (Diph- thong). ஔ என்பது அ, உ என்னும் ஈரொலிகள் சேர்ந்த புணரொலி. இரு புணரொலிகட்கும் அகரம் பொதுவாயிருப்பதால் அதை நீக்கி இறுதி யிலிருக்கின்ற இ, உ என்பன முறையே ஐகார ஔகாரகட்குச் செயற்கை யினக் குறில்களாகச் சேர்க்கப்பட்டுள. உயிரளபெடையில் ஐகார ஔகார அளபெடைகளைக் குறித்தல் வேண்டி, இங்ஙனம் செயற்கையினக் குறில் கள் சேர்க்கப்பட்டுள வென்க.

மெ-யெழுத்துகளில் வல்லினமும் மெல்லினமும் க, ங; ச, ஞ; ட; ண; த, ந; ப, ம; ற, ன என ஒன்றுக்கொன் றினமாகு மென்றறிக.

ச. மாத்திரை

11. மாத்திரை என்பது எழுத்தை உச்சரிக்கும் கால அளவு. (மாத்திரை - அளவு) மருத்துவனிடத்திலுள்ளது மருந்தளவு. இலக்கணத்திலுள்ளது ஒலியளவு.

12. இயல்பான ஓரிமைப் பொழுதாவது ஒரு நொடிப் பொழுதாவது ஒரு மாத்திரை யளவாம். நொடி கைந்நொடி.

13.உயிரானாலும் உயிர்மெ-யானாலும் குறிலுக்கு மாத்திரை ஒன்று; நெடிலுக்கு மாத்திரை இரண்டு. மெ-யெழுத்திற்கும் ஆ-தத்திற்கும் குற்றிய லிகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் தனித்தனி மாத்திரை அரை.

குறிப்பு: இசையிலும் விளியிலும் புலம்பலிலும் பண்டமாற்றிலும் எழுத்து கள் தத்தம் மாத்திரையளவைக் கடந்தொலிக்கும்.

"