உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இயற்றமிழ் இலக்கணம்

சை சங்கீதம்; விளி கூப்பிடுதல்; புலம்பல் அழுகை; பண்ட மாற்று வியாபாரம்)

உ-ம்.

இசை - சாஅ நிச தநிபா (சங்கராபரண வர்ணத் தொடக்கம்) ஆ நீண் டொலித்தது.

எஎ

பொன்னார் மேனியனே எ எ எ - ஏ நீண்டொலித்தது.

விளி - இராமா அ அ - ஆ நீண்டொலித்தது.

புலம்பல் - ஐயையோ ஒ ஒ - ஓ நீண்டொலித்தது.

பண்டமாற்று – தயிரோ ஒ ஒ தயிர் -ஓ நீண்டொலித்தது.

மொழிமுத லெழுத்துக்கள்

14. தமிழில் எல்லா எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவ தில்லை. வரும் எழுத்துகள் மொழிமுத லெழுத்துக்கள்

மொழிக்கு

எனப்படும்.

முதலில்

15. உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

உ-ம். அடை, ஆடை, இடு, ஈடு, உடை, ஊடு, எடை, ஏடு, ஐயன், ஒடி,

ஓடை,ஒளவை.

16. மெ-யெழுத்துகள் உயிரோடு கூடி யல்லது மொழிக்கு முதலில் வரா. அங்ஙனம் வரும் எழுத்துகள் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங என்னும் பத்தே.

17. அவற்றுள் க, ச, த, ந, ப, ம என்னும் ஆறும் பன்னீருயிருடனும் கூடி மொழிக்கு முதலில் வரும்.

உ-ம்.

கடை, காடு, கிடை, கீரி, குடை, கூடு, கெடு, கேடு, கையர், கொடை, கோடு, கௌவை.

சரி, சாடு, சிறு, சீறு, சுடு, சூடு, செடி, சேடு, சைவம், சொறி, சோடு, சௌரியம்.

தடை, தாடை, திரி, தீமை, துளி, தூறு, தெளி, தேடு, தையல், தொடு, தோடு, தௌவை.

நடை, நாடு, நிறு, நீடு, நுதி, நூறு, நெடு, நேற்று, நைவு, நொடி,

நோவு, நௌவி.

படை, பாடு, பிடி, பீடு, புளி, பூடு, பெடை, பேடு, பையன், பொரி, போடு, பௌவல்.

மடை, மாடு, மிசை, மீறு, முடை, மூடு, மெலி, மையம், மொழி, மோடு, மௌவல்.