உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

ம்

53

18. வகரம் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டு உயிரோடுங் கூடி மொழிக்கு முதலில் வரும்.

உ-ம். வடை, வாடை, விடை, வீடு, வெடி, வேடு, வையம், வௌவால்.

19. யகரம் அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள என்னும் ஆறு உயிரோடும் கூடி மொழிக்கு முதலாம்.

உ-ம்.

யவனர், யாது, யுகம், யூகம், யோகம், யௌவனம் இவற்றுள் யாது என்னும் சொல்லே தமிழ். ஏனையவெல்லாம் வடமொழி.

20. ஞகரம் அ, ஆ, எ, ஒ என்னும் நான்குயிரோடு கூடி மொழிக்கு முதலில் வரும்.

உ-ம். ஞமலி (நா-), ஞாயிறு, ஞெகிழி, (கொள்ளிக்கட்டை), ஞொள்கல் (இளைத்தல்)

மிஞிறு (வண்டு)என்னும் சொல் இலக்கணப் போலியாகி ஞிமிறு என நிற்கும்போது ஞகரம் இகரத்தோடும் கூடி மொழிமுதலில் வருவதாகக் கொள்ளலாம்.

21. ஙகரம் சுட்டெழுத்துக்குப் பின்னாலும், எ, யா என்னும் வினா வெழுத்து களுக்குப் பின்னாலும், அகரத்தோடு கூடி ஒரே மொழியில் முதலா வரும்.

உ-ம்.

அங்ஙனம் இங்ஙனம்

சுட்டெழுத்திற்குப் பின்

உங்ஙனம்

எங்ஙனம்?

யாங்ஙனம்?

வினாவெழுத்திற்குப் பின்

(நன். சூ. 102)

3. பன்னீ ருயிரும் கசதந பமவய

ஙஞஈ ரைந்துயிர் மெ-யும் மொழிமுதல்.

மேலே காட்டியபடி மொழிமுதலெழுத்துகள் மொத்தம் நூற்று மூன்றாகும். இங்குக் கூறப்படாத ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு எழுத்துகளும் மொழிமுதல் வரா.