உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இயற்றமிழ் இலக்கணம்

கூ.போலியின் வகை

22.போலி சொல்லில் வரும் இடம்பற்றி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூவகைப்படும். கடைப்போலி இறுதிப்போலி எனவும் கூறப்படும்.

23. இனி, போலி தான் வரும் மொழிபற்றித் தனிமொழிப் போலி தொடர் மொழிப் போலி எனவும் இருவகைப்படும்.

தனிமொழிப் போலி

முதற்போலி

உ-ம்.

நேயம் - ஞேயம்

நண்டு - ஞண்டு

நகரத்திற்கு ஞகரம் போலி.

பகுத்தல்-வகுத்தல் - பகரத்திற்கு வகரம் போலி.

முனி - நுனி

முகக்கோல் - நுகக்கோல்

} மகரத்திற்கு நகரம் போலி

வறுமை - வெறுமை

பருமை - பெருமை

அகரத்திற்கு எகரம் போலி.

பையல் - பயல்

மையல் - மயல்

ஐகாரத்திற்கு அகரம்போலி

இடைப்போலி

ஈயல் - ஈசல்

இயைவு - இசைவு

யகரத்திற்குச் சகரம் போலி.

செ-வேன் - செ-கேன்

சிவப்பு - சிகப்பு

வகரத்திற்குக் ககரம் போலி.

அரசன் - அரைசன்

இலஞ்சி - இலைஞ்சி

அகரத்திற்கு ஐகாரம் போலி.

கடைப்போலி

குலம் - குலன்

குணம் - குணன்

மகரத்திற்கு னகரம் போலி.