உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

திறம் - திறல் } மகரத்திற்கு வகரம் போலி.

55

குடல் - குடர்

குதில் - குதிர்

லகரத்திற்கு ரகரம் போலி.

மதில் - மதிள்

திமில் - திமிள்

லகரத்திற்கு ளகரம் போலி.

ஈரிடப்போலி

நீந்து - நீஞ்சு

ஈந்து - ஈஞ்சு

நகர தகரங்களுக்கு ஞகர சகரம் போலி.

மூவிடப்போலி அல்லது முற்றுப்போலி

ஐந்து -அஞ்சு

ஐகாரத்திற்கு அகரமும், நரத்திற்கு

நைந்து - நஞ்சு

ஞகரமும், தகரத்திற்குச் சகரமும்

போலி.

தொடர்மொழிப் போலி

ஐந்நூறு-ஐஞ்ஞூறு

அரைநாண் - அரைஞாண் சே-நலூர்-சே-ஞலூர்

4.

ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே.

(560T.. 124)

சால்லியல்

2. வடசொல்: சமஸ்கிருதச் சொல் தமிழில் வந்து வழங்கும் போது வடசொல் எனப்படும்.

சமஸ்கிருதம் ஆதியில் வடக்கே (வட இந்தியாவில்) வழங்கினதால் வடமொழி யெனப்பட்டது. அதன்மேல் வடசொல் எனப்பட்டது.

25. வடசொல் தற்சமம், தற்பவம் என இரு வகைப்படும்.

26. தற்சமம்: சமஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒன்றுபோல் ஒலிக்கும் வடசொல் தற்சமம் எனப்படும்.

உ-ம்.

அமலம், காரணம், குங்குமம்