உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இயற்றமிழ் இலக்கணம்

இவை, சமஸ்கிருத உச்சரிப்பிற்குச் சமமாஒலித்தலால் தற்சமம் எனப்பட்டன. (தற்சமம் அதற்குச் சமமானது.) வடமொழிக்கும் தென் மொழிக்கும் பொதுவாயுள்ள எழுத்துகளால் ஆக்கப்பட்டிருப்பதே வட சொற்கள் தற்சமமாஒலித்தற்குக் காரணமாம்.

27. தற்பவம்: சமஸ்கிருத எழுத்துத் திரிந்து வழங்கும் வடசொல் தற் பவ மெனப்படும்.

உ-ம்.

சமஸ்கிருதம் புத்ர: ஜ்ஞானம்:

தற்பவம்

புத்திரன்

ஞானம்

ஜன:

சனம்

பாபம்

பாவம்

க்ரு ண:

ராஜ்யம் ரக்ஷா

கிருட்டிணன், கிட்டிணன் இராச்சியம்

இரட்சை

இங்குக் காட்டப்பட்ட தற்பவங்கள் சரியான சமஸ்கிருதச் சொற்களா யிராமல், அவற்றின் திரிபாயிருப்பதால் தற்பவமெனப் பட்டன. தற்பவம் அதனினின்றும் பிறந்தது அதாவது திரிந்தது. வடசொற்கள் பெரும்பாலும் வடமொழிச் சிறப்பெழுத்துகளாலாக்கப்பட்டிருப்பதே தற்பவமாதற்குக் காரணமாம்.

பெயர்ச்சொல்

23. காரண இடுகுறிப் பெயர்: ஒரு காரணப் பெயர் அதன் காரணம் பற்றிய பல பொருள்களையுங் குறியாது ஒரே ஒரு பொருள் குறிப்பின் காரண விடுகுறிப்பெயராம்.

காரணமாகவும் இடுகுறியாகவும் உள்ளது காரண விடுகுறி. காரண மாவது ஒரு காரணம்பற்றிப் பல பொருள்களைக் குறிக்கும் பெயர். இடு குறியாவது அவற்றுள் ஒன்றற்கே இட்டகுறி. (குறி -பெயர்).

உ-ம். முக்கண்ணன், நாற்காலி.

முக்கண்ணன் என்பது மூன்று கண்களுடைய சிவன், விநாயகன் என் னும் இருவரையும் குறியாது சிவனையே குறித்தலின் காரண விடுகுறியா யிற்று.

நாற்காலி என்பது நான்கு கால்களையுடைய பல ஆசனங்களையும், விலங்குகளையும் குறியாது ஒரே ஓர் ஆசனத்தைக் குறித்தலின்; காரணவிடு குறியாயிற்று.