உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

பொதுப்பெயர், சிறப்புப் பெயர்

57

29. இடுகுறிப்பெயரும் காரணப் பெயரும் பொதுப் பெயரென்றும் சிறப்புப் பெயரென்றும் தனித்தனி இருவகைப்படும்.

30. பொதுப்பெயர், சில பொருள்கட்குப் பொதுவாகவுள்ள பெயர்: சிறப்புப் பெயர், ஒன்றற்கே சிறப்பாகவுரிய பெயர்.

இடுகுறிப் பொதுப் பெயர் - மரம்

இடுகுறிச் சிறப்புப் பெயர் - பனை

காரணப் பொதுப் பெயர் - அணி

காரணச் சிறப்பு பெயர் - வளை

மரம் என்பது காரணமில்லாமல் இடப்பட்ட குறியாகவும், ஒரு வகுப் புப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் பொதுப் பெயராகவும் மிருத்தலான் இடு குறிப் பொதுப்பெயராயிற்று.

பனை என்பது காரணமில்லாமல் இடப்பட்ட குறியாயும், ஒன்றற்கே யுரிய சிறப்புப் பெயராயு மிருத்தலான், இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.

அணி யென்பது காரணப் பெயராயும், அணியக்கூடிய பல ஆபரணங் கட்கும் பொதுப்பெயராவுமிருத்தலான், காரணப் பொதுப்பெயராயிற்று.

வளை என்பது காரணப் பெயராயும் வளைந்திருக்கின்ற பல ஆபர ணங்களையும் குறியாது பெண்டிர் கையிலணிகின்ற வளையலுக்கே சிறப் புப் பெயராயுமிருத்தலான் காரணச் சிறப்புப் பெயராயிற்று.

ஆகுபெயர்

31. ஆகுபெயராவது ஒரு பொருளின் பெயர் அதற்குத் தொடர்பான மற்றொரு பொருளுக்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது.

ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் பலவகையிற் றொடர் புண்டாகும். என்ன தொடர்பால் ஒரு பொருளின் பெயர் மற்றொரு பொரு ளுக்கு ஆகி வருகிறதோ, அன்ன தொடர்பால் அது இன்ன ஆகுபெய ரென் றழைக்கப்படும்.

(1) பொருளாகு பெயர்: பொருளாகு பெயராவது பல உறுப்புகளை யுடைய ஒரு பொருளின் பெயர் அதன் உறுப்புகளில் ஒன்றற்கு ஆகி

வருவது.