உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இயற்றமிழ் இலக்கணம்

பொருளென்றது உடம்பை; அது முதலெனவுங் கூறப்படும்.

உ-ம்.

தாமரை போன்ற திருவடி - இதில் 'தாமரை' என்னும் செடிப் பெயர் அதன் உறுப்பாகிய மலருக்கு ஆகி வந்தது.

(2) இடவாகு பெயர்: ஓர் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள பொரு ளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.

உ-ம்.

சேலம் வாங்கினான் இதிற் சேலம் என்னும் இடப்பெயர் அவ் விடத்தில் செ-யப்படும் ஆடைக்கு ஆகி வந்தது.

இடவாகு பெயர் தானவாகு பெயரென்றும் சொல்லப்படும். (தானம் இடம்).

(3) காலவாகு பெயர்: காலவாகுபெயராவது ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தில் தோன்றும் (அல்லது விளையும்) பொருளுக்கு ஆகி வருவது.

உ-ம்.

-

கோடை விளைந்தது இதில் கோடை என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளைந்த தானியத்திற்கு ஆகி வந்தது.

(4) சினையாகு பெயர்: சினையாகு பெயராவது ஓர் உறுப்பின் பெயர் அவ் வுறுப்பை யுடைய உடம்பிற்கு ஆகி வருவது.

து பொருளாகு பெயர்க்கு எதிர். (சினை உறுப்பு.)

உ-ம்.

வெற்றிலை நட்டான் - இதில் வெற்றிலை என்னும் சினைப் பெயர் அதையுடைய கொடிக்காயிற்று.

(5) குணவாகு பெயர்: குணவாகு பெயராவது ஒரு குணத்தின் பெயர் அக் குணத்தையுடைய பொருளுக்கு ஆகி வருவது.

உ-ம்.

வண்ணான் வெள்ளை கொண்டுவந்தான் - இதில் வெள்ளை என்னும் குணப்பெயர் அக் குணத்தையுடைய உடுப்பிற்கு ஆகி வந்தது.

குணவாகு பெயர் பண்பாகு பெயரென்றுங் கூறப்படும். (குணம் - பண்பு.)

(6) தொழிலாகு பெயர்: தொழிலாகு பெயராவது ஒரு தொழிலின் பெயர் அத் தொழிலையுடைய பொருளுக்கு ஆகி வருவது.

உ-ம்.

பறவை என்பது, பறத்தற் றொழிலை யுடைய பிராணிக்கு ஆகி வந்தது.

-