உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

வேற்றுமைப் பொருள்கள்

வேற்றுமை

59

32. முதல் வேற்றுமை: முதல் வேற்றுமை, கருத்தாப் பொருளில் வரும். (கருத்தா எழுவா; தொழில் செ-பவன்.)

உ-ம்.

-

இராமன் படிக்கிறான் - இராமன் எழுவா-.

33. இரண்டாம் வேற்றுமை: இரண்டாம் வேற்றுமை, செயப்படு பொருட் பொருளில் வரும்.

செயப்படுபொருள் ஒரு கருத்தாவாற் செயப்படும் பொருள். அது பொருளாகவாவது தொழிலாகவாவது இருக்கும். செயப்படுபொருள் செ- பொருள் என்றும் கூறப்படும்.

உ-ம். குயவன் குடத்தை வனைந்தான் - குடம்

இராமன் பாடத்தைப் படித்தான் - பாடம் செ-பொருள்

34. மூன்றாம் வேற்றுமை: மூன்றாம் வேற்றுமை, கருவிப் பொருளி லும், கருத்தாப் பொருளிலும், உடனிகழ்ச்சிப் பொருளிலும் வரும்.

உளியாற் செ-தான் - உளி கருவி.

கொத்தனாற் கட்டப்பட்டது - கொத்தன் கருத்தா.

இராமனோடு இலக்குமணன் சென்றான் - இராமன் செலவோடு இலக்குமணன் செலவு உடனிகழ்தல் உடனிகழ்ச்சி.

35. நான்காம் வேற்றுமை: நான்காம் வேற்றுமை, கொடை, பகை, நேர்ச்சி முதலிய பொருள்களில் வரும்.

(நேர்ச்சி - நட்பு.)

-

அதிகமான் ஔவைக்கு அருநெல்லிக்கனி அளித்தான் கொடை. பாம்பிற்குக் கீரி பகை - பகை.

சேரமான் பெருமாளுக்குச் சுந்தரமூர்த்தி நண்பர் - நேர்ச்சி.

36. ஐந்தாம் வேற்றுமை: ஐந்தாம் வேற்றுமை, நீங்கல் ஒப்பு முதலிய பொருள்களில் வரும்.

உ-ம். மரத்தினின்று விழுந்தது மலர் - நீக்கம்.

காக்கையிற் கரிது களம்பழம் ஒப்பு.