உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இயற்றமிழ் இலக்கணம்

காக்கையின் என்பது காக்கையைப்போல என்றும், காக்கையைவிட என்றும் இரு பொருள்பாடும். முன்னது ஒப்புப் பொருவு (Positive degree) என்றும், பின்னது உறழ்பொருவு (Comparative degree) என்றும் கூறப் படும். (பொருவு = சமம்.)

37. ஆறாம் வேற்றுமை: ஆறாம் வேற்றுமை, கிழமைப் பொருளில் வரும்.

(கிழமை - உரிமை, உடைமை.)

இராமனது வீடு.

38.ஏழாம் வேற்றுமை: ஏழாம் வேற்றுமை இடப்பொருளில் வரும்.

உ-ம். தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்கள் உள

வீட்டிலிருக்கிறான்

- தமிழ் இடம் வீடு இடம்.

39. எட்டாம் வேற்றுமை: எட்டாம் வேற்றுமை, விளிப்பொருளில் வரும். (விளி -கூப்பிடுதல்.)

இராமா! வா; அண்ணா! சொல்.

விளி ஏற்காத பெயர்கள்

40. தன்மைப் பெயர்களும் முன்னிலைப் பெயர்களும் 'நு' என்னும் எழுத்தை முதலாகவுடைய கிளைப்பெயர்களும், ஐம்பால் வினாப்பெயர் களும், ஐம்பாற் சுட்டுப்பெயர்களும் தான் தாம் முதலிய படர்க்கைப் பெயர்களும் விளி யேலா.

அப்பெயர்களாவன

யான், நான், யாம், நாம் - தன்மைப் பெயர்கள்

நீ, நீர், நீங்கள் - முன்னிலைப் பெயர்கள்

நுமன், நுமள், நுமர், நுமது, நும்மவை

எவன், எவள், எவர், எது, எவை

ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை

யாவன், யாவள், யாவர், யாது, யாவை

அவன், அவள், அவர், அது, அவை இவன், இவள், இவர், இது, இவை உவன், உவள், உவர், உது, உவை

தான், தாம், தாங்கள்

  • - கிளைப் பெயர்கள்

}-

  • -வினாப் பெயர்கள்.

}-சுட்டுப்

சுட்டுப் பெயர்கள்

படர்க்கைப் பெயர்கள்.