உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

5.

நுவ்வொடு வினாச்சுட் டுற்ற னளர

வைதுத் தாம்தான் இன்னன விளியா.

61

(நன். சூ.314)

4. பெயர் உருபேற்கும்போது வரும் சாரியைகள்

41. சாரியை: சாரியையாவது தாமாகச் சாராத இருசொற்களை அல்லது சொல்லுறுப்புகளைச் சார்ந்தவற்றை இசைக்கும் அசை.

சார்ந்து இயைப்பது சாரியை. (இயைத்தல் இசைத்தல்).

உ-ம்.

புளி ( + அம்) + பழம் = புளியம்பழம்

பட்டினம் ( + அத்து) + ஆன் = பட்டினத்தான்.

42. எல்லாவிடத்தும் பொதுவாக வருகின்ற சாரியைகள் அன், ஆன், இன்,அல்,அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன, தன், தம், ஆம்,ஆ,ஓ முதலியன.

43. இவற்றுள் பெயர் உருபேற்கும்போது வருவன அன், இன், அற்று, அத்து, தம், நம், நும், உ, தன் முதலியன.

உ-ம்.

அது + கு = அதற்கு - அன் சாரியை

அது + கு = அதனுக்கு - அன், உ சாரியைகள்

ஊர் + கண் = ஊரின்கண் - இன் சாரியை

பல + ஐ = பலவற்றை அற்றுச்சாரியை

மரம் + ஐ = மரத்தை - அத்துச்சாரியை

அவர் + ஐ = அவர்தம்மை - நம் சாரியை

எல்லாம் + ஐ = எல்லாநம்மையும் - நம் சாரியை

எல்லீரும் + ஐ = எல்லீர்நும்மையும் = நும் சாரியை

இராமன் + ஐ = இராமனுக்கு - உ சாரியை

என் + கு = என்றனுக்கு - தன், உ சாரியைகள்

உன் + ஐ = உன்றனை - தன் சாரியை.

குறிப்பு: மேற்காட்டியவற்றுள் சில பெயர்கள் அதுக்கு, அவரை, எல்லீரையும், இராமற்கு எனச் சாரியை பெறாமாலும் உருபேற்கும்.

6.

அன்ஆன் இன்அல் அற்றிற் றத்தம்

தம்நம் நும்ஏ அஉ ஐகுன

இன்ன பிறவும் பொதுச்சா ரியையே.

(நன்.சூ.244)