உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இயற்றமிழ் இலக்கணம்

5. வினைச்சொல்

44. வினைச்சொல் தெரி நிலைவினை, குறிப்புவினை என இரு வகைப்படும்.

தெரிநிலைவினை

45. தெரிநிலைவினையாவது காலமும் செயலும் வெளிப்படையாகத் தெரிய நிற்கும் வினை.

தெரிய நிற்பது தெரிநிலை.

உ-ம்.

வந்தான்.

46. தெரிநிலைவினை செ-பவன் (கருத்தா), கருவி, நிலம் (இடம்), செயல், காலம், செ-பொருள் என்னும் இவ் வாறையுங் காட்டும்.

இவற்றுள் செ-பவன், செயல், காலம் என்னும் மூன்றும் முறையே விகுதி, பகுதி, இடைநிலை என்னும் வினையுறுப்புகளால் வெளிப்படை யாகவும், ஏனைய குறிப்பாகவும் தோன்றும்.

தெரிநிலைவினை முற்றாயிராது எச்சமாயிருப்பின் செ-பவனைக் காட்டாது; செயப்படுபொருள் குன்றிய வினையாயிருப்பின், செ-பொருளை யுங் காட்டாது.

உ-ம்.

7.

வனைந்தான்

இதில் வனை என்னும் பகுதியால் வினை (செயல்)யும், த் என்னும் இடைநிலையால் காலமும், ஆன் என்னும் விகுதியால் செ-பவனும் வெளிப்படையாகத் தெரிந்தன. ஏனைக் கருவி, நிலம், செ-பொருள் என்னும் மூன்றும் ஊகித் தறியப்படும்.

செ-பவன் கருவி நிலம்செயல் காலம் செ-பொருள் ஆறும் தருவது வினையே.

(நன். சூ.320)

குறிப்பு வினை

47. குறிப்பு வினையாவது செயலைக் குறிப்பாக உணர்த்தும் வினை.

உ-ம்.

உண்டு, பெரிது.

48. குறிப்புவினை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயரின் அடியாகப் பிறந்து, விகுதி (வினைமுற்று விகுதி)யால் வினைமுதலை (கருத்தாவை) மட்டும் காட்டும்.