உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

பொன்னன் - பொருட்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. கருவூரான் – இடப்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. ஓணத்தான் -காலப்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. மூக்கன் - சினைப்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. தீயன் - குணப்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. தச்சன் – தொழிற்பெயர் அடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று.

63

இவை பகுதியால் ஆறுவகைப் பெயரையும் விகுதியால் கருத்தாவை யுங் காட்டின.

பொன்னன் என்பது பொன்னை யுடைவனா யிருக்கிறான் என்று குறிப்பாக வினையைக் காட்டிற்று.

அஃது இன்னகாலத்திற் பொன்னனென்று ஒரு காலத்தைச் சிறப்பாகக் குறியாமையால் முக்காலத்திற்கும் பொதுவாம். அஃது ஒரு காலத்தைச் சிறப்பாகப் குறிக்கவேண்டின் பண்டு, இன்று, நாளை என்ற பிறசொற்களைக் கொண்டே குறிக்கும். இங்ஙனமே பிறவும்.

உ-ம். பண்டு பொன்னன் - இறந்தகாலம்.

இன்று பொன்னன் - நிகழ்காலம்.

நாளை பொன்னன் - எதிர்காலம்.

உடையன் என்னும் குறிப்பு வினைமுற்று, செ-பொருளையும் காட்டும்; எச்சமான, குறிப்புவினைகள் கருத்தாவைக் காட்டா.

உ-ம். தீய - பெரிய.

8. பொருள்முத லாறினும் தோற்றிமுன் ஆறனுள்

வினைமுதல் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே.

(நன்.சூ.321)

49. வேறு, இல்லை, உண்டு என்னும் குறிப்புவினைகள் ஐம்பால் மூவிடம் ஈரெண்கட்கும் பொது. இவை முற்றாயினும் எச்சமாயினும் கருத் தாவைக் காட்டா.

உ-ம். தன்மை - நான், நாம், நாங்கள், முன்னிலை - நீ, நீர், நீங்கள்,

வேறு

இல்லை

படர்க்கை - அவன், அவள், அவர், அது, அவை.

உண்டு

(நன்.சூ.339)

9. வேறில்லை உண்டைம் பால்மூ விடத்தன.

50. யார், எவன் என்னும் வினாப்பெயர்களும், குறிப்பு வினைமுற்று களாக வரும்.