உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இயற்றமிழ் இலக்கணம்

51. யார் என்பது உயர்திணை முப்பாற்கும், எவன் என்பது அஃறிணை யிருபாற்கும் ஏற்கும். எவன் என்பது இடை குறைந்து என் என நிற்கவும், என்னே, என்னை, என்னோ எனத் திரியவும் பெறும்.

உ-ம்.

அவன், அவள், அவர் - யார்?

அது, அவை - எவன்? என்? என்ன?

முற்றுவினை, எச்சவினை

52. தெரிநிலையும் குறிப்புமாகிய வினைகள் முற்று, எச்சம் எனத் தனித்தனி இருவகைப்படும். எச்சமும், பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும்.

ஆகவே, வினை,

உ-ம்.

தெரிநிலை வினைமுற்று,

தெரிநிலைப் பெயரெச்சம்,

தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினைமுற்று,

குறிப்புப் பெயரெச்சம்,

குறிப்பு வினையெச்சம் என மொத்தம் ஆறு வகைப்படும்.

வந்தான்

வந்த (பையன்)

வந்து (போனான்)

செல்வன்

செல்வப் (பிள்ளை)

வலியக் (கொடுத்தான்)

தெரிநிலை வினைமுற்று.

தெரிநிலைப் பெயரெச்சம்.

தெரிநிலை வினையெச்சம்

குறிப்பு வினைமுற்று.

குறிப்புப் பெயரெச்சம்.

குறிப்பு வினையெச்சம்.

குறிப்பு: குறிப்புப் பெயரெச்ச விகுதி 'அ' ஒன்றே; உதாரணம் மேலே காட்டப்பட்டது.

குறிப்பு வினையெச்ச விகுதிகள் அ, றி து, ஆல், மல், மே, மை முத லியன. இவற்றுள் 'அ' உடன்பாட்டில் மட்டும் வரும். 'து' உடன்பாடு, எதிர்மறை இரண்டிலும் வரும். ஏனைய எதிர்மறையில் மட்டும் வரும்.

உ-ம்.

வலிய - அ உடன்பாடு.

வலிது - து உடன்பாடு.

இல்லாது-து எதிர்மறை.

இன்றி - றி

அல்லால் - ஆல்

இல்லாமல் - மல்

எதிர்மறை.

இல்லாமே -மே

இல்லாமை - மை