உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

65

கால், வழி, இடத்து முதலிய சொற்கள் குறிப்பு வினையெச்சப் பொருள்

பட வருவதுமுண்டு.

உ-ம்.

இல்லாக்கால்,

இல்லாவழி,

இல்லாவிடத்து.

6 பகுபத உறுப்புகள்

53. பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகளாம். இவற்றுள் பகுதி விகுதி இரண்டும் இன்றி யமையாதவை. ஏனைய ஒன்றும் பலவும் வந்தும் வராமலும் இருக்கும்.

54. பகுதி: பகுதி எப்போதும் முதலில் நின்று, பெயர், வினை, இடை, உரி என்னும் நான்கனுள் ஒன்றைக் காட்டும்.

உ-ம். கண்ணன் - கண், பெயர்ப்பகுதி.

வந்தான் - வா, வினைப்பகுதி.

மற்றவன் - மற்று, இடைப்பகுதி.

சான்றோர் - சால, உரிப்பகுதி.

பகுதி முதலில் நிற்பதனால், முதனிலை யென்றுங் கூறப்படும்.

55. விகுதி: விகுதி எப்போதும் கடைசியில் நின்று பால், இடம், எச்சம், பெயர் முதலியவற்றுள் ஒன்றை உணர்த்தும்.

உ-ம்.

வந்தான் - ஆன், ஆண்பால் உணர்த்திற்று. வந்தேன் - ஏன், தன்மை ஒருமை உணர்த்திற்று. வந்து - உ, எச்ச முணர்த்திற்று.

வருகை - கை, தொழிற்பெயரை யுணர்த்திற்று.

விகுதி இறுதியிலிருப்பதால், இறுதிநிலை யென்றுங் கூறப்படும். (இறுதி

கடைசி).

வேற்றுமை யுருபும் விகுதியின்பாற் படும்.

56. இடைநிலை: இடைநிலை எப்போதும் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலத்தையாவது; பகுதி விகுதி இணைப்பையாவது காட் டும். அது பெயரிடைநிலை, வினையிடைநிலை என இருவகைப்படும். பெயரிடைநிலை காலங் காட்டாது; வினையிடைநிலை காலங்காட்டும்.