உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இடையில் நிற்பது இடைநிலை எனப்பட்டது.

உ-ம்.

இயற்றமிழ் இலக்கணம்

வந்தான் (வ+ந்+த்+ஆன்)-த் வினையிடைநிலை இறந்தகாலங் காட்டிற்று.

அறிஞன் (அறி+ஞ்+அன்)-ஞ் பெயரிடைநிலை பகுதி விகுதி களை இணைத்தது.

57. சந்தி: சந்தியென்பது புணர்ச்சி. அது தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூவகைப் புணர்ச்சி விகாரங்களுள், தோன்றல் ஒன்றையே குறிக் கும். பகுபதத்திற் பல உறுப்புகள் சேரும்போது பல புணர்ச்சிகள் தோன்று மேனும், பகுதியும் அதற்கடுத்த உறுப்பும் புணரும் புணர்ச்சியே சந்தியாகக் கூறப்படும்.

+

படித்தான் - படி + த் + தான் (த் + ஆன்) - த் சந்தி.

வந்தான் - வ + ந் + தான் (த் + ஆன்) - ந் - சந்தி.

குறிப்பு: வந்தான், இருந்தான் முதலிய சொற்களில், ந் என்பதே சந்தி. திரிதலும் கெடுதலும் தனியெழுத்துக ளன்மையின் பகுபத வுறுப்பாகா.

58. சாரியை: சாரியை என்பது பெரும்பாலும் விகுதிக்கு அயலா- (முன்னால்) நின்று புணர்ச்சி, இன்னோசை முதலியவற்றுள் ஒன்றைப்பற்றி வரும்; சிறுபான்மை ஈற்றில் நின்று எழுத்தொலி யேனும், இன்னோசை யேனும் உணர்த்தும்.

இரு பதங்களை அல்லது பதவுறுப்புகளைச் சார்ந்து இயைப்பது (இசைப்பது) சாரியை எனப்பட்டது.

59. சாரியை எழுத்துச் சாரியை சொற்சாரியை என இருவகைப்படும். சொற்சாரியை தனிமொழிச் சாரியை புணர்மொழிச் சாரியை என இருவகைப் படும். புணர்மொழிச் சாரியை முன்னர்ப் புணரியலுட் கூறப்பட்டது. இங்குத் தனிமொழிச் சாரியையே கூறப்படும். பகுபதம் தனிமொழியாதலின்.

உ-ம்.

ஈற்றயற் சாரியை

பட்டினத்தான் = பட்டினம் + அத்து + ஆன்: அத்துச் சாரியை புணர்ச்சிபற்றி வந்தது.

வந்தனன்+வ+ந்+த்+அன்+அன் அன் சாரியை இன்னோசை

பற்றி வந்தது.