உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

ஈற்றுச் சாரியை

அகரம் - கரம் எழுத்தொலிபற்றி வந்தது.

நெஞ்சம் - நெஞ்சு + அம்: அம் இன்னோசைபற்றி வந்தது. எழுத்துச்சாரியை எழுத்தை உச்சரிக்கத் துணையா வருவது.

உ-ம். அகரம் - கரச்சாரியை.

ஆகாரம் - காரச்சாரியை.

சொற்சாரியை, சொல்லில் வருவது.

உ-ம்.

பட்டினத்தான் - அத்துச்சாரியை.

67

60. விகாரம்: விகாரம் என்பது பகுதியின் விகாரமென்றும், புணர்ச்சி விகாரமாகிய திரிதல் என்றும், இருவகையாகக் கூறுவர் ஆசிரியர். புணர்ச்சி விகாரம் சந்தியுளடங்குதலாற் பகுதியின் விகாரம் என்பதே சிறந்த கொள்கை யாகும். (விகாரம் வேறுபாடு).

உ-ம்.

வந்தான் = வா, வ எனக் குறுகிற்று.

தருகிறான் = தா, தரு எனத் திரிந்தது.

பகுபத வுறுப்புகள் பகுபதத்தில் நிற்கும் முறை பின்வருமாறு

10.

1. ஈருலுப்பு :

2.மூவுறுப்பு :

3. நாலுறுப்பு :

4.ஐயுறுப்பு:

பகுதி + விகுதி - கண் + அன் = கண்ணன்.

பகுதி + இடைநிலை + விகுதி.

- த் செ- + த் + ஆன் = செ-தான்.

+

பகுதி + சந்தி + இடைநிலை + விகுதி -

படி + த் + த் + ஆன் = படித்தான்.

பகுதி + சந்தி + இடைநிலை + சாரியை + விகுதி

- படி + த் + த் + அன் + அன் = படித்தனன்.

5.ஆறுறுப்பு : பகுதி + சந்தி + இடைநிலை + சாரியை + விகுதி + விகாரம்-

வா + ந் + த் + அன் + அன் = வந்தனன்.

வினைமுற்றுப் பகுபதங்களே ஆறுறுப்புகளையும் பெற்றுவரும்.

பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை

முன்னிப் புணர்ப்ப முடியும்எப் பதங்களும்

(நன். சூ.133)