உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இயற்றமிழ் இலக்கணம்

7 ஏவல் வினை

61. ஏவல் வினையாவது ஏவல் பொருளில் வரும் வினை. அஃது ஒருமையில் பகுதியளவாயும் இ, ஆ- என்னும் விகுதிகளைப் பெற்றும் இருக்கும்; பன்மையில் உம், ஈர், மின் என்னும் விகுதிகளைப் பெற்றிருக் கும்; கள் என்பது விகுதிமேல் விகுதியாவரும்.

உடன்பாட்டு ஏவல்

உ-ம். ஒருமையேவல் - வா, செ-தி, நடவா-, செ-தி என்பதில் த் எழுத்துப் பேறு.

பன்மையேவல் - வாரும், செ-யீர், நடமின், வாருங்கள், நடமின்கள் - கள் விகுதிமேல் விகுதி.

எதிர்மறை ஏவல்

62. எதிர்மறை ஏவல், ஒருமையில் அல், ஏல் என்னும் விகுதிகளைப் பெற்றும், ஆகார எதிர்மறை இடைநிலையோடு ஏ, இ என்னும் விகுதிகளைப் இ பெற்றும் இருக்கும்; பன்மையில் அல் என்பதோடு மின் என்னும் விகுதி யையும், ஆகார எதிர்மறை இடைநிலையோடு இர், ஈர் என்னும் விகுதி களையும் பெற்றிருக்கும். கள் என்பது விகுதிமேல் விகுதியாவரும்.

உ-ம்.

எதிர்மறை ஏவலொருமை: அஞ்சல், அஞ்சேல். செ-யாதே, செ-யாதி -இவற்றுள் த் எழுத்துப்பேறு.

எதிர்மறை ஏவற்பன்மை:

செ-யன்மின் = அல் + மின்

செ-யாதிர் = ஆ + இல்

த் எழுத்துப்பேறு.

செ-யாதீர் = ஆ + ஈர்>5

செ-யாதீர்கள் = கள் விகுதிமேல் விகுதி.

ஏவுவதெல்லாம் முன்னிலையாரையே யாதலானும், ஏவினபிறகே ஏவின வினை செ-யப்படுதலானும், ஏவல் வினைகளெல்லாம் முன்னிலை யிடத்திற்கும் எதிர்காலத்திற்கும் உரியவாகும்.

8. வியங்கோள்வினை

63. வியங்கோள்வினை மரியாதை ஏவல்வினை, இஃது ஐம்பால் மூவிடம் ஈரெண்கட்கும் பொதுவா-வரும்.

(வியம் - ஏவல்; வியங்கொள்ளுவது வியங்கோள்).