உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

69

64. வியங்கோள் வினை, க, இய, இயர்,அ, அல், இ, ஈயர், உம் முத லிய விகுதிகளைப் பெற்று வரும். உம் உலக வழக்கில் மட்டும் வரும்.

உ-ம்.

செ-க

செ-யிய

செ-யியர்

வாழ

நான், நாம் நீ, நீர்

வாழல்

அவன், அவள், அவர், அது,அவை.

வாழி

நிலீயர்

எழுதவும்

வியங்கேள் வினை, ஏவல், வேண்டுகோள் வாழ்த்தல், வைதல் (சாபம்), வஞ்சினம், வாக்கு முதலிய பல பொருள்களில் வரும்.

(வஞ்சினம் - சபதம்)

உ-ம்.

வருக - ஏவல்.

தருக - வேண்டுகோள்.

வாழ்க -வாழ்த்தல். அழிக-வைதல்.

நான் அவனை வெல்லாவிடின்

அவற்கு அடிமையாக.

இத் தொகையை வட்டியும்

அசலுமாகக் கொடுத்துவிடுவேனாக.

வஞ்சினம்.

}

வாக்கு.

ஏவல்வினை, வியங்கோள்வினை என்னுமிரண்டும் எப்போதும் முற்றாகவே யிருக்கும்; இவற்றுக்கு எச்சமில்லை.

ஏவலுக்கும், வியங்கோளுக்கும் வேறுபாடு:

ஏவல்

1. முன்னிலைக்கே உரியது.

2. அதிகாரத்தோடு கட்டளையிடுவது.

3.ஏவற்பொருளில் மட்டும் வரும்.

4. ஒருமை பன்மை என்னும் எண் காட்டும்.

வியங்கோள்

மூவிடத்திற்கு முரியது.

மரியாதையா- ஏவுவது.

ஏவல், வாழ்த்தல் முதலிய பல

பொருள்களில் வரும்.

ஈரெண்ணுக்கும் பொது.